/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் பேரணிகோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் பேரணி
கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் பேரணி
கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் பேரணி
கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் பேரணி
ADDED : ஜூலை 28, 2011 01:28 AM
கோவில்பட்டி : மாற்றுத்திறனாளிகளுக்கு பென்சன் தொகையை உயர்த்திய முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கோவில்பட்டியில் மாற்றுத் திறனாளிகள் ஊர்வலம் நடந்தது.
தமிழக அரசின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் பென்சனை ரூ.500ல் இருந்து 1000மாக உயர்த்தியதற்கு நன்றி தெரிவித்து கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் சார்பில் நன்றி ஊர்வலம் நடந்தது. கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு துவங்கிய பேரணிக்கு சேவா தொண்டர் பாலமுருகன் தலைமை வகித்தார். நேதாஜி விவேகானந்தா சேவா சங்க நிறுவனர் நாகராஜன் வரவேற்றார். தொடர்ந்து கோவில்பட்டி எம்எல்ஏ., ராஜூ கலந்து கொண்டு நன்றி ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
இதையடுத்து ஊர்வலமாக சந்தைப்பேட்டைத்தெரு, முத்தானந்தபுரம் தெரு, ஏ.கே.எஸ் தியேட்டர் ரோடு, மெயின் ரோடு உட்பட நகரின் முக்கிய வீதிகளில் வந்து பஸ் ஸ்டாண்ட் முன்பு முடிந்தது. ஊர்வலத்தில் பார்வையற்றோர் சங்க செயலாளர் கருப்பசாமி, தலைவர் சந்தனம், காதுகேளாதோர் சங்க தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் சுப்பிரமணியன், மனவளர்ச்சி குன்றியோர் அணி, ஆறுமுகச்சாமி, வெங்கடேசன், தமிழ்செல்வன், உடல் ஊனமுற்றோர் அணி சத்தியராஜ், முதியோர் அணி முத்துராக்கம்மாள், சங்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நேதாஜி விவேகானந்தா சேவா சங்க நிறுவனர் நாகராஜன் செய்திருந்தார்.


