ADDED : ஆக 13, 2011 12:48 AM
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்தூத்துக்குடி : வ.உ.சி சிலையை அவமதிப்பு செய்தவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அø டக்க வலியுறுத்தி நேற்று கலெ க்டர் அலுவலகம் முன்பு வ.உ .சி பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா பிள்ளையார்நத்தம் கிராமத்தில் கடந்த முதல்தேதி இரவு வ.உ .சிதம்பரனார் படத்தின் மீது சமூக விரோதிகளால் செருப்பு மாலை போட்டு, அவமதிப்பு செய்யப்பட்டது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வ.உ.சிபேரவை சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதே இடத்தில் மீண்டும் வ.உ.சி படம் வைக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று வ.உ.சி பேரவை நிறுவன தலைவர் சுப்புராஜ் ஏற்பாட்டின் பேரில் அரசிடம் பேர வை சார்பில் வலியுறுத்தப்பட் டு வருகிறது. வ.உ.சி படத்தை அவமதித்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும், அதே இடத்தில் மீண்டும் படத்தை வைக்க வலியுறுத்தியும் நேற்று வ.உ.சி பேரவை சார்பில் தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தூத்துக்குடியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பொன் .லட்சுமணன் தலைமை வகித்தார். மாநகர தலைவர் முத்துவிஜயன் முன்னிலை வகித்தார். மாநில இளைஞரணி தலைவர் திருச்சிற்றம்பலம் வரவேற்றார். மகாராஜன், சாமிக்குமார் உள்ளிட்ட அதிகமான ஆண், பெண்கள் கலந்து கொண்டனர். கோ ரிக்கை நிறைவேற்றாவிட்டால் அடுத்ததாக சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டது.


