Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/சொத்துக்காக தந்தையை கொன்று நாடகம்: மோப்பநாய் உதவியுடன் மகன் திடீர் கைது

சொத்துக்காக தந்தையை கொன்று நாடகம்: மோப்பநாய் உதவியுடன் மகன் திடீர் கைது

சொத்துக்காக தந்தையை கொன்று நாடகம்: மோப்பநாய் உதவியுடன் மகன் திடீர் கைது

சொத்துக்காக தந்தையை கொன்று நாடகம்: மோப்பநாய் உதவியுடன் மகன் திடீர் கைது

ADDED : ஆக 19, 2011 11:06 PM


Google News
திருச்சி: திருச்சி அருகே சொத்துக்கு ஆசைப்பட்டு தந்தையை கொலை செய்து, நாடகமாடிய மகனை மோப்பநாய் கவ்விப்பிடித்து காட்டிக் கொடுத்தது.

இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அடுத்துள்ள அல்லூர் களத்துமேட்டு பகுதியில் வசித்தவர் தங்கவேல் (65). விவசாயியான இவர், மனைவி மருதாம்பாள், மகன் சசிக்குமார் (38) ஆகியோருடன் வசித்து வந்தார். தங்கவேலுக்கு சொந்தமாக, அல்லூரை அடுத்துள்ள மேலபச்சேரி கிராமத்தில் 40 சென்ட் இடம் உள்ளது. அதை விற்க தங்கவேல் முடிவு செய்தார். இதற்கு மகன் சசிக்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 'நிரந்தர வேலையின்றி கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் எனக்கு நிலத்தை கொடுத்து விடுங்கள்' என்று தந்தையிடம் சசிக்குமார் கேட்டுள்ளார். அதற்கு தந்தை மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மகன், தந்தை இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு மகனுக்கும், தந்தைக்கும் நிலம் தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்களை தாய் மருதாம்பாள் சமாதானப்படுத்தியுள்ளார். அதன்பின் இருவரும் தூங்கச் சென்று விட்டனர். தூங்கச் சென்ற சசிக்குமாருக்கு ஆத்திரம் அடங்கவில்லை. இதையடுத்து இரவு 11 மணிக்கு மேல் எழுந்திருந்த சசிக்குமார் வீட்டை விட்டு வெளியே வந்து, கயிற்று கட்டிலில் படுத்திருந்த தந்தை தங்கவேலை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். பின் ஒன்றும் அறியாதவர் போல் வீட்டுக்குள் சென்று படுத்துக் கொண்டார். நேற்று காலை எழுந்த சசிக்குமார் வெளியே வந்து, 'தனது தந்தையை யாரோ கொலை செய்து விட்டனர்' என்று சத்தம் போட்டு ஊரைக்கூட்டியுள்ளார். அவரே ஜீயபுரம் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். மற்றவர்கள் பரிதாபப்படும் படி தந்தையின் உடல் அருகே நின்று அழுது புரண்டுள்ளார். சிறிது நேரத்தில் சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் ஜாக்குடன் போலீஸார் வந்தனர். மோப்பநாய் ஜாக் முதலில் இறந்து கிடந்த தங்கவேல், கட்டில் மற்றும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கயிறு ஆகியவற்றை மோப்பம் பிடித்து விட்டு, சிறிது நேரத்தில் அருகில் நின்றிருந்த சசிக்குமாரை கவ்விப்பிடித்தது. இதையடுத்து சசிக்குமாரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, தனது தந்தையை கொலை செய்ததை சசிக்குமார் ஒப்புக் கொண்டார். அவரை கைது செய்து ஜீயபுரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். சொத்துக்காக பெற்ற தந்தையையே கயிற்றால் கழுத்தை நெரித்த கொலை செய்த மகனை செயல் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us