Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மாஜி பெயரை கூறி நிலம் அபகரிப்பு: தி.மு.க., பிரமுகர் மீது வழக்கு

மாஜி பெயரை கூறி நிலம் அபகரிப்பு: தி.மு.க., பிரமுகர் மீது வழக்கு

மாஜி பெயரை கூறி நிலம் அபகரிப்பு: தி.மு.க., பிரமுகர் மீது வழக்கு

மாஜி பெயரை கூறி நிலம் அபகரிப்பு: தி.மு.க., பிரமுகர் மீது வழக்கு

UPDATED : ஆக 19, 2011 08:01 PMADDED : ஆக 19, 2011 07:57 PM


Google News
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில், முன்னாள் அமைச்சரின் பெயரை பயன்படுத்தி நிலத்தை அபகரித்த, தி.மு.க., பிரமுகர்கள் மீது வழக்கு பதியப்பட்டது.

வேடசந்தூர் சுல்த்தான் அலி தெருவை சேர்ந்த ரபீக் அகம்மது, 29, திண்டுக்கல் எஸ்.பி., சந்திரசேகரனிடம் அளித்த மனு:வேடசந்தூர் தாலுகாவில், 5 ஏக்கர் 29 சென்ட் நிலம், எனது மாமா அகம்மது சேட் பெயரில் உள்ளது. இதன் மதிப்பு மூன்றரை கோடி ரூபாய். கடந்த ஆண்டு, இதை இரண்டு கோடி ரூபாய்க்கு தருமாறு, வெள்ளனம்பட்டி தி.மு.க., பிரமுகர் பழனிச்சாமி, மனைவி விஜயா, நகர பொறுப்பாளர் ஆறுமுகம், பாலு மிரட்டினர். மறுத்ததால், 'அமைச்சரிடம் சொல்லி உள்ளே தள்ளிடுவேன்' என, மிரட்டி வாங்கினர். சொத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூறியிருந்தார்.இதன்படி, பழனிச்சாமி உட்பட நான்கு பேர் மீது இன்ஸ்பெக்டர் முருகன், எஸ்.ஐ., ரவீந்திரன் வழக்கு பதிந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us