Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பலி

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பலி

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பலி

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பலி

ADDED : ஆக 19, 2011 11:20 PM


Google News
தர்மபுரி: தர்மபுரி அருகே குடிப்போதையில் கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பரிதாபமாக இறந்தார்.

தர்மபுரி அடுத்த ஏ.பாப்பாரப்பட்டி சேர்ந்த விவசாயி செல்வம் (40). அப்பகுதியிலுள்ள அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் இருந்த செல்வம், அங்குள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்து இறந்தார். நேற்று காலை விவசாய கிணற்றில் பிணமாக மிதந்த செல்வத்தை அவரது உறவினர்கள் மீட்டனர். பாப்பாரப்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us