சிவகங்கையில் வினாத்தாள் குழப்பம் - மாணவர்களிடம் எழுதி வாங்கிய கல்வித்துறை
சிவகங்கையில் வினாத்தாள் குழப்பம் - மாணவர்களிடம் எழுதி வாங்கிய கல்வித்துறை
சிவகங்கையில் வினாத்தாள் குழப்பம் - மாணவர்களிடம் எழுதி வாங்கிய கல்வித்துறை
UPDATED : செப் 30, 2011 11:30 PM
ADDED : செப் 30, 2011 11:17 PM
சிவகங்கை: சிவகங்கையில் பிளஸ் 1 சிறப்பு தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட குழப்பம் குறித்து 'தினமலர் இதழ்' செய்தி வெளியிட்டதால், ஆசிரியர், மாணவர்களிடம் கல்வித்துறை அதிகாரிகள் எழுதி வாங்கினர்.
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த பிளஸ் 1 மாணவர்களுக்கான காலாண்டு சிறப்புதமிழ் தேர்வை ஆயிரக்கணக்கான மாணவர்கள் எழுதினர். இவர்களுக்கு, 180 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கவேண்டும். ஆனால், 30 ஒரு மதிப்பெண் உட்பட 60 மதிப்பெண்களுக்கு மட்டுமே வினாக்கள் இடம்பெற்றிருந்தன. இதனால், எஞ்சிய 120 மதிப்பெண்களுக்கு விடை அளிப்பதா, வேண்டாமா என தெரியாமல் மாணவர்கள் குழப்பத்தில் இருந்தனர். இது குறித்து நேற்று தினமலர் இதழ் செய்தி வெளியிட்டது. இதையடுத்து, முதன்மை கல்வி அலுவலர் செல்லம் உத்தரவுபடி, நேற்று சிறப்பு தமிழ் தேர்வு எழுதிய பிளஸ் 1 மாணவர்கள் ஒவ்வொரிடமும் 'சிறப்பு தமிழ் வினாத்தாளால் மனதளவில் எந்த பாதிப்பும் இல்லை' என எழுதி வாங்கினர். அதே போல் ஆசிரியர்களிடமும் எழுதி வாங்கினர்.