ADDED : ஆக 19, 2011 11:03 PM
பெரியகுளம்:பெரியகுளம் பட்டாளம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர்
அழகர்சாமி,55.
அதே பகுதியைச் சேர்ந்தவர் இவரது மருமகன் சுந்தர், 25.
சுந்தருடன் கோபித்துக்கொண்டு அவரது மனைவி தந்தை வீட்டிற்கு வந்தார்.மனைவியை
அழைத்து வரச்சென்ற சுந்தருக்கும், அழகர்சாமிக்கும், தகராறு ஏற்பட்டது.
சுந்தர் கம்பியால், அழகர்சாமியை குத்தினார். பெரியகுளம் அரசு
ஆஸ்பத்திரியில் அழகர்சாமி சேர்க்கப்பட்டுள்ளார். போலீசார் சுந்தரை கைது
செய்தனர்.


