/உள்ளூர் செய்திகள்/தேனி/ஆர்த்தோ, கண் டாக்டர்இல்லாமல் நடந்த முகாம்ஆர்த்தோ, கண் டாக்டர்இல்லாமல் நடந்த முகாம்
ஆர்த்தோ, கண் டாக்டர்இல்லாமல் நடந்த முகாம்
ஆர்த்தோ, கண் டாக்டர்இல்லாமல் நடந்த முகாம்
ஆர்த்தோ, கண் டாக்டர்இல்லாமல் நடந்த முகாம்
ADDED : ஆக 19, 2011 11:01 PM
தேனி:தேனியில் நடந்த சிறப்பு முகாமில் ஆர்த்தோ, கண் டாக்டர்கள்
இல்லாததால் மாற்று திறனாளிகள சிரமத்திற்கு உள்ளாகினர்.மாவட்ட நிர்வாகம்
மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்களை மாவட்டல் நடத்தி வருகிறது.
தேனியில் நடந்த முகாமிற்கு ஏராளமானோர் வந்திருந்தனர். இவர்களை பரிசோதிக்க
வந்திருந்த ஆர்த்தோ டாக்டர் மதியம் 12 மணிக்கு புறப்பட்டுச் சென்று
விட்டார். கண் டாக்டர் வரவேயில்லை. காது, மூக்கு, தொண்டை டாக்டரும், மனநல
டாக்டரும் மட்டும் பரிசோதித்தனர்.
ஆர்த்தோ, கண் டாக்டர்களிடம் சான்றிதழ் பெற வேண்டிய மாற்று திறனாளிகள்,
டாக்டர்கள் இல்லாமல் ஏமாற்றத்துடன் சென்று விட்டனர்.இதுபோன்ற முகாம்களில்
டாக்டர்கள் முழு நேரமும் இருந்து பரிசோதனை செய்ய கலெக்டர் பழனிசாமி
நடவடிக்கை எடுக்க வேண்டும்.


