/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்
கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்
கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்
கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்
ADDED : செப் 16, 2011 03:47 AM
ஊத்துக்கோட்டை:பஸ் நிலையம் அருகே மற்றும் பொதுமக்கள் அதிகளவு பயன்படுத்தும்
சாலைகளில், கழிவுநீர் வெளியேறி வருவதால், அப்பகுதியில் நோய் பரவும் அபாயம்
ஏற்பட்டுள் ளது.தமிழக - ஆந்திர எல்லையில் அமைந்துள்ளது ஊத்துக்கோட்டை
பேரூராட்சி. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன.
சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தங்களின் அத்தியாவசியத்
தேவைகளுக்கு, தினமும் ஊத்துக்கோட்டை வருகின்றனர். இங்குள்ள பஜாரின் மை யப்
பகுதியில், பஸ் நிலையம் உள்ளது. பஸ் நிலையத்திற்கு செல்லும் சாலை வழியே,
கழிவுநீர் கால்வாய்களிலிருந்து தினமும் கழிவுநீர் வெளியே வந்து, குளம் போல்
தேங்கி நிற்கிறது.
பஸ் நிலையம் செல்ல வேண்டிய பயணிகள், கழிவுநீர் குளத்தை தாண்டிச் செல்லும்
போது, சிலர் கால் தவறி அதில் விழுந்து விடுகின்றனர். முதியவர்கள், பெண்கள்,
சிறுவர்கள் இதனால் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.இதேபோல், திருவள்ளூர்
சாலையிலுள்ள பெரும்பாலான வீடுகளிலிருந்து கழிவுநீர், சாலையில்
பெருக்கெடுத்து ஓடுகிறது. காலை நேரங்களில், இதுபோல் செல்லும் கழிவுநீரால்
எழும் துர்நாற்றத் தை சுவாசித்துக் கொண் டே, மாணவர்கள் பள்ளிக்குச் ö
சல்கின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:'ஊத்துக்கோட்டையில்
அமைந்துள்ள கழிவுநீர் கால்வாய்கள் அனைத்தும் குறைந்தது, 5 அடிக்கு அதிகமான
ஆழத்தில் உள்ளது. சாலை ஓரங்களில் கடை வைத்திருப்பவர்கள், கடைகளில்
சேர்ந்திருக்கும் குப்பைகள் மற்றும் குளிர்பானக் கடைகள் வைத்திருப்பவர்கள்,
பிளாஸ்டிக் பேப்பர்கள் மற்றும் கப்புகள் ஆகியவற்றை கால்வாய்களில் கொட்டி
விடுகின்றனர். இதனால் கழிவுநீர் மேற்கொண்டு செல்ல வழியின்றி, சாலைகளில்
வந்து விடுகிறது. திருவள்ளூர் சாலையிலுள்ள வீடுகளில் இருந்து கழிவுநீர்
மட்டுமின்றி, செப்டிக் டேங்குகளில் இருந்து வெளியேறும் நீரும், சாலையில்
வந்து விடுகிறது. இதனால், இவ்வழியே செல்லும் மக்கள், முகத்தை துணியால்
மூடிக்கொண்டு செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால் நோய் பரவும் அபாயமும்
ஏற்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் அடிக்கடி கழிவுநீர் கால்வாய்களை
சுத்தப்படுத்தினால் மட்டுமே, இதுபோன்ற நிலை மீண்டும் ஏற்படாது.' இவ்வாறு
அவர்கள் தெரிவித்தனர்.