/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சத்துணவு ஊழியர்கள் வைப்பு நிதி கணக்கு துவக்கம்சத்துணவு ஊழியர்கள் வைப்பு நிதி கணக்கு துவக்கம்
சத்துணவு ஊழியர்கள் வைப்பு நிதி கணக்கு துவக்கம்
சத்துணவு ஊழியர்கள் வைப்பு நிதி கணக்கு துவக்கம்
சத்துணவு ஊழியர்கள் வைப்பு நிதி கணக்கு துவக்கம்
ADDED : ஆக 05, 2011 03:13 AM
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் ஒன்றிய சத்துணவு ஊழியர்களுக்கு
பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு துவங்குவதற்கான விண்ணப்பம் பெறும் பணி
துவங்கியது.தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சத்துணவு ஊழியர்களின்
கோரிக்கை ஏற்று வருங்கால வைப்பு நிதி வழங்க உத்தரவிட்டது.
அதனை தொடர்ந்து
காட்டுமன்னார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட சத்துணவு ஊழியர்களுக்கு பொது
வருங்கால வைப்பு நிதி கணக்கு துவங்குவதற்காக ஆயத்த பணிகள்
துவங்கப்பட்டது. இதற்கான ஆய்வு கூட்டம் காட்டுமன்னார்கோவில் ஒன்றியத்தில்
நடந்தது. சத்துணவு மேலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சத்துணவு
அமைப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், செல்வராஜ் ஆகியோர் சத்துணவு ஊழியர்களை
ஒருங்கிணைத்து விண்ணப்பங்கள் பெற்றனர்.ஒன்றியத்துக்குட்பட்ட 55
பஞ்சாயத்துகளில் உள்ள 123 பள்ளிகளில் இருந்து சத்துணவு பணியாளர்கள் 330
பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் பொறுப்பாளர்கள், சமையலர், உதவியாளர் என
அனைவரிடமும் விண்ணப்பங்கள் பெறும் பணி நடந்து வருகிறது.