/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி படகு ஓட்டுனர்கள் அமைச்சரிடம் மனுபணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி படகு ஓட்டுனர்கள் அமைச்சரிடம் மனு
பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி படகு ஓட்டுனர்கள் அமைச்சரிடம் மனு
பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி படகு ஓட்டுனர்கள் அமைச்சரிடம் மனு
பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி படகு ஓட்டுனர்கள் அமைச்சரிடம் மனு
ADDED : ஜூலை 31, 2011 03:22 AM
கிள்ளை : பிச்சாவரம் சுற்றுலாத் துறை படகு ஓட்டுனர்கள் பணி நிரந்தரம் கோரி
சுற்றுலாத்துறை அமைச்சரிடம் மனு கொடுத்தனர்.பிச்சாவரம் சுற்றுலா மையத்தை
ஆய்வு செய்ய வந்த அமைச்சர் கோகுல இந்திராவிடம் படகு ஓட்டுநர்கள் சந்தித்து
தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
கடலூர்
மாவட்டம் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் கடந்த 25 ஆண்டுகளாக படகு ஓட்டிகளாக
பணியாற்றி வரும் நாங்கள் பணி பாதுகாப்பு மற்றும் நிரந்தரம் இல்லாமல்
உள்ளோம்.சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் படகு சவாரிக்கான பில்லில்
இருந்து கமிஷன் மட்டும் வழங்கப்படுகிறது. மேலும் பணி பாதுகாப்பில்லாததால்
மழைக் காலத்தில் வருவாய் இல்லாமல் பாதிக்கப்படுகிறோம்.பல்வேறுத் துறையில்
பணியாற்றும் மற்ற தொழிலாளர்கள் போல் எங்களையும் பணி நிரந்தம் செய்து
மழைக்காலத்தில் நிவாரணம் உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும் எனக் கேட்டு மனு
கொடுத்தனர்.