Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ரூ.2.26 கோடியில் கடனுதவி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வழங்கல்

ரூ.2.26 கோடியில் கடனுதவி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வழங்கல்

ரூ.2.26 கோடியில் கடனுதவி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வழங்கல்

ரூ.2.26 கோடியில் கடனுதவி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வழங்கல்

ADDED : ஆக 28, 2011 12:38 AM


Google News
பொள்ளாச்சி : கோவை மண்டல இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில், பயனாளிகளுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி, பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் நடந்தது.

பொள்ளாச்சி ஐ.ஓ.பி., கிளை மேலாளர் கனகராஜ் வரவேற்றார். என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்களின் செயலாளர் ராமசாமி தலைமை வகித்தார். கோவை மண்டல ஐ.ஓ.பி., வங்கி மண்டல மேலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்து பேசுகையில், ''பொள்ளாச்சி பகுதியில், சிறு, குறு நிறுவனங்களுக்கு கடன் அதிகளவு வழங்கப்படுகிறது; கடன் வாங்குவோர், முறையாக திருப்பி செலுத்த வேண்டும். கடன் வழங்குவதில், 97 சதவீதம் மக்கள் திருப்பி செலுத்துகின்றனர். 3 சதவீதம் பேர் செலுத்துவதில்லை. பொள்ளாச்சியில், தென்னை மற்றும் அதை சார்ந்த காயர் நிறுவனங்கள் அதிகளவில் செயல்பட்டு வருகின்றன; காயர் தொழிற்சாலைக்கு அதிகளவு கடன் வழங்கப்படுகிறது. வாய்ப்பை, மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றனர். உடுமலை, கணியூர், பொள்ளாச்சி, கோட்டூர் பகுதிகளை சேர்ந்த 106 பயனாளிகளுக்கு, 2.26 கோடி மதிப்பில் கடன் வழங்கப்பட்டது. பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லூரி ஐ.ஓ.பி., கிளை வங்கி முதுநிலை மேலாளர் சாமிநாதன், கொமரலிங்கம் கிளை முதுநிலை மேலாளர் மணி, உடுமலை கிளை முதுநிலை மேலாளர் சிவகுமார், கணியூர் கிளை முதுநிலை மேலாளர் அரசு, கோட்டூர் கிளை முதுநிலை மேலாளர் இந்திரராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us