ADDED : ஜூலை 29, 2011 11:07 PM
வத்தலக்குண்டு : தமிழ்நாடு தமிழ்ப்பதிப்பாளர் சங்கம், தனலட்சுமி புக் ஸ்டால் சார்பில் புத்தக கண்காட்சி வத்தலக்குண்டில் நாளை துவங்குகிறது.
பஸ் ஸ்டாண்ட் பின்புறம், 23 நாட்கள் நடக்கும் கண்காட்சியில் ஆன்மிகம், அறிவியல், தன்னம்பிக் கை, நாவல்கள், இலக்கியம், விளையாட்டு, குழந்தைகள், மாணவர்கள் என, 10 ஆயிரம் தலைப்புகளில் புத்தகங்கள் கிடைக்கும். சிறப்பு சலுகையாக 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும்.