Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/புதிய ஆயுர்வேத மருந்து "காப்ரான் 11' அறிமுகம்

புதிய ஆயுர்வேத மருந்து "காப்ரான் 11' அறிமுகம்

புதிய ஆயுர்வேத மருந்து "காப்ரான் 11' அறிமுகம்

புதிய ஆயுர்வேத மருந்து "காப்ரான் 11' அறிமுகம்

ADDED : ஆக 23, 2011 01:43 AM


Google News
கோவை : இருமலுக்கு புதிய ஆயுர்வேத மருந்து, 'காப்ரான் 11' என்ற மருந்தை,சௌபாக்யா டிரேடிங் கம்பெனி கோவையில் அறிமுகப்படுத்தியுள்ளது. கோவையில் சௌபாக்யா டிரேடிங் கம்பெனி, 'மயூரா' பெயரில் கோதுமை ரவா, பருப்பு வகைகள், மசாலா பொருட்கள், வறுகடலை போன்ற பல பொருட்களை தூய்மைப்படுத்தி, பாக்கெட்டில் விற்பனை செய்து வருகிறது. இதன் அடுத்த முயற்சியாக இருமல், சளிக்கு புதிய ஆயுர்வேத மருந்து, 'காப்ரான் 11' என்ற மருந்தை அறிமுகம் செய்துள்ளது.

இது குறித்து, சௌபாக்யா டிரேடிங் கம்பெனியின் நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் கூறியதாவது: 'காப்ரான் 11' ஆயுர்வேத மருந்து, யஸ்திமது, துளசி, கற்பூரம், திப்பிலி, சுக்கு உள்ளிட்ட பல ஆயுர்வேத பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது. இருமல், சளி போன்றவற்றை குணப்படுத்தும். தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். தமிழ்நாட்டில் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு, செந்தில்குமார் தெரிவித்தார்.

புதிய இருமல் மருந்து 'காப்ரான் 11' அறிமுக விழா கோவையில் நேற்று நடந்தது. சௌபாக்யா டிரேடிங் கம்பெனியின் நிர்வாக இயக்குநர் செந்தில் குமார் வரவேற்றார். கந்தசாமி முன்னிலை வகித்தார். கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி அறிமுகப்படுத்தி விற்பனையை துவக்கி வைத்தார். பாங்க் மேலாளர் ராஜாராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us