/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/அரசு பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் சங்கம் துவக்கம்அரசு பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் சங்கம் துவக்கம்
அரசு பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் சங்கம் துவக்கம்
அரசு பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் சங்கம் துவக்கம்
அரசு பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் சங்கம் துவக்கம்
ADDED : செப் 20, 2011 11:43 PM
கும்பகோணம்: கும்பகோணம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் கும்பகோணம் அரசு பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் சென்டரல் ரோட்டரி சங்கத்தலைவர் சிவசிதம்பரம் வரவேற்றார். கும்பகோணம் அரசு பெண்கள் கல்லூரி முதல்வர் (பொ) சுமந்தி தேவி முன்னிலை வகித்தார். ரோட்டரி மாவட்ட ஆளுநர்தேர்வு பழனிவேலு ரோட்ராக்ட் சங்கத்தை தொடங்கி வைத்து மூன்றாமாண்டு ஆங்கிலத்துறை மாணவி நதியா, செயலாராக கனிமொழி,ஒருங்கிணைப்பாளராக ராஜேஸ்வரி, தலைவியாக பதவிபிராமணம் செய்து வைத்து பேசியதாவது:சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் ரோட்டரி சங்கம் பல்வேறு வகையில் உதவி வருகிறது. இதனால் சேவை செய்யும் மனப்பான்மை வளர்ந்துள்ளது. இந்த எண்ணம் மாணவிகளிடேயே வரவேண்டும் என்பதால்தான் இந்த சங்கங்கள் தொடங்கி வைக்கப்படுகின்றன. இதன் மூலம் இந்த மாணவிகளுக்கு சேவை செய்யும் மனப்பான்மை வளர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
தலைவர் சிவசிதம்பரம் பேசுகையில், ''சென்ட்ரல் ரோட்டரி சங்கம் இந்த கல்லூரியில் உள்ள ரோட்டராக்ட் சார்பில் முதல் சேவையாக ஒரு வாரத்தில் இக்கல்லூரியில் 1,000 மாணவியருக்கு ரத்தவகை கண்டுபிடிப்பு முகாம் 15 ஆயிரம் ரூபாய் செலவில் செய்ய உள்ளதாகவும் மாணவிகளுக்கு உயிர்காப்பதற்கு ரத்தம் தேவை பட்டால் கும்பகோணம் சென்டரல் ரோட்டரி சங்கத்தை தொடர்பு கொண்டால் சங்கம் உதவ தயாராக உள்ளது,'' என்றார்.கழ்ச்சியில், ரோட்டரி சங்க முன்னால் தலைவர் பார்த்தசாரதி, உறுப்பினர்கள் பாபுராஜ், வாசு, கலைச்செல்வன், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.