Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/மக்களின் உணர்வுகளை மத்திய அரசு உணரவேண்டும் : அணுமின்நிலை எதிர்ப்பு கூட்டத்தில் பங்குதந்தை பேச்சு

மக்களின் உணர்வுகளை மத்திய அரசு உணரவேண்டும் : அணுமின்நிலை எதிர்ப்பு கூட்டத்தில் பங்குதந்தை பேச்சு

மக்களின் உணர்வுகளை மத்திய அரசு உணரவேண்டும் : அணுமின்நிலை எதிர்ப்பு கூட்டத்தில் பங்குதந்தை பேச்சு

மக்களின் உணர்வுகளை மத்திய அரசு உணரவேண்டும் : அணுமின்நிலை எதிர்ப்பு கூட்டத்தில் பங்குதந்தை பேச்சு

ADDED : செப் 13, 2011 12:12 AM


Google News

கன்னியாகுமரி : மூன்று மாவட்ட மக்களின் நியாயமான உணர்வுகளை மத்திய அரசு உணரவேண்டும் என்று கூடன்குளம் அணுமின்திட்ட எதிர்ப்பு கூட்டத்தில் கன்னியாகுமரி பங்குதந்தை லியோன் கென்சன் பேசினார்.

கூடன்குளத்தில் அமைந்துள்ள அணு மின் நிலையத்தை மூட வலியுறுத்தி நெல்லை மாவட்டம் இடிந்த கரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஆதரவு தெரிவித்து கன்னியாகுமரியில் நேற்று மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மேலும் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக புறப்பட்டு செல்லும் முன் கன்னியாகுமரி புனித அலங்கார உபகார அன்னை ஆலயத்திற்கு முன் நடந்த கண்டன கூட்டத்தில் பங்குதந்தை லியோன் கென்சன் பேசியதாவது: கூடன்குளம் அணுமின்நிலையம் செயல்பட்டால் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட கடலோரங்களில் மீன் வளம் குறைவதுடன் விவசாயிகளும் கடும் பாதிப்படைவர். நமக்கு பாதிப்பை ஏற்படுத்திவிட்டு அணுமின் நிலையத்தால் என்ன பயன்? வாழ்வாதாரங்களையும், மக்களையும் சிதைக்கும் இந்த அணுமின் நிலையத்தை மூடவேண்டும். மூன்று மாவட்ட மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். நமது அண்டை மாநிலமான கேரளாவில் ஒட்டுமொத்த மக்களின் எதிர்ப்பு காரணமாக அங்கு அணு மின்நிலையம் ஏற்படுத்த முடியவில்லை. ஆனால் இங்கு ஏற்படுத்தப்படுகிறது என்றால் மத்திய அரசு நம்மை ஏமாற்றுகிறது. எனவே அணுமின் நிலையத்தை நிரந்தரமாக மூடும் வரை மக்கள் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் இணை பங்குதந்தை அமல்ராஜ், கன்னியாகுமரி பஞ்., துணை தலைவர் வின்ஸ்டன், விசைப்படகு சங்க நிர்வாகிகள் கிராசியான், சுதன், மீனவர் முன்னணி தலைவர் மைக்கேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us