/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மயானத்தை சீரமைக்க மா.கம்யூ., கோரிக்கைமயானத்தை சீரமைக்க மா.கம்யூ., கோரிக்கை
மயானத்தை சீரமைக்க மா.கம்யூ., கோரிக்கை
மயானத்தை சீரமைக்க மா.கம்யூ., கோரிக்கை
மயானத்தை சீரமைக்க மா.கம்யூ., கோரிக்கை
ADDED : செப் 21, 2011 12:12 AM
அவிநாசி : உமையஞ்செட்டிபாளையம் மயானத்தை சீரமைக்க வேண்டுமென மா.கம்யூ.,
கோரிக்கை விடுத்துள்ளது.
அவிநாசி அருகே உமையஞ்செட்டிபாளையம் கிளை
மா.கம்யூ., மாநாடு, வையாபுரி தலைமையில் நடந்தது. கதிர்வேல் கொடியேற்றினார்.
மாவட்டக்குழு உறுப்பினர் ஈஸ்வரமூர்த்தி சிறப்புரை ஆற்றினார். செயலாளர்
வெங்கடாசலம் வேலை அறிக்கை தாக்கல் செய்தார். ஒன்றிய செயலாளர்
எஸ்.வெங்கடாசலம் மாநாட்டு நிறைவுரை ஆற்றினார். ஆரம்பப்பள்ளிக்கு
காம்பவுண்ட் சுவர், உமையஞ்செட்டிபாளையத்திலேயே ஓட்டுச்சாவடி அமைத்தல்,
மங்கலம் ரோடு வரை தார் சாலை வசதி, ராமநாதபுரத்தில் பொதுக்கழிப்பிட வசதி,
சாக்கடை, தெருவிளக்கு வசதி, புதர்மண்டிக்கிடக்கும் மயானத்தை சீரமைத்து பாதை
அமைக்க வேண்டும்; திருப்பூர் செல்ல அரசு பஸ் வசதி ஆகிய கோரிக்கைகளை
வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிளைக்கு புதிய செயலாளராக
குமரேசன் தேர்வு செய்யப்பட்டார்.