/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஆட்டோ மாணிக்கத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடிஆட்டோ மாணிக்கத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி
ஆட்டோ மாணிக்கத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி
ஆட்டோ மாணிக்கத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி
ஆட்டோ மாணிக்கத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி
ADDED : ஜூலை 13, 2011 03:25 AM
சேலம்: சொத்து அபகரிப்பு வழக்கில், தி.மு.க., கவுன்சிலர் ஆட்டோ மாணிக்கம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு, தள்ளுபடி செய்யப்பட்டது.சேலம், அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த பத்மாவதி என்பவர் கொடுத்த நில அபகரிப்பு புகார் தொடர்பாக, தி.மு.க., கவுன்சிலர் ஆட்டோ மாணிக்கம் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் இருக்கும் போதே, வீராணம் அருகில் உள்ள சின்னேரி பகுதியில், நிலம் அபகரிப்பு செய்ததாக சுப்ரமணியம் என்பவர், மீண்டும் ஆட்டோ மாணிக்கம் மீது புகார் அளித்தார்.அதன்பேரில், வீராணம் போலீஸார், ஆட்களை கொண்டு மிரட்டி, சட்ட விரோதமாக நிலத்தை ஆக்கிரமித்தாக சங்கர், கணேசன், ஆட்டோ மாணிக்கம் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.ஏற்கனவே, சிறையில் இருந்து கடந்த வாரம் ஜாமீனில் வெளிவந்த ஆட்டோ மாணிக்கம், சுப்ரமணியம் கொடுத்த புகாரின் பேரில், போலீஸார் கைது செய்வதை தவிர்க்க, சேலம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில், முன் ஜாமீன் கேட்டு நேற்று முன்தினம் மனுதாக்கல் செய்தார்.
இம்மனு மீது, நேற்று விசாரணை நடந்தது. அரசு தரப்பு வக்கீல், அருள் புஷ்பராஜ், முன் ஜாமீன் தர எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, ஆட்டோ மாணிக்கத்தின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து முதன்மை மாவட்ட நீதிபதி பாஸ்கரன் உத்தரவிட்டார். தி.மு.க., கவுன்சிலர் ஆட்டோ மாணிக்கம் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என, போலீஸார் தெரிவித்தனர்.


