/உள்ளூர் செய்திகள்/திருவாரூர்/குளத்தில் பாய்ந்து வாலிபர் சாவு 7 வாலிபருக்கு 11 ஆண்டு சிறைகுளத்தில் பாய்ந்து வாலிபர் சாவு 7 வாலிபருக்கு 11 ஆண்டு சிறை
குளத்தில் பாய்ந்து வாலிபர் சாவு 7 வாலிபருக்கு 11 ஆண்டு சிறை
குளத்தில் பாய்ந்து வாலிபர் சாவு 7 வாலிபருக்கு 11 ஆண்டு சிறை
குளத்தில் பாய்ந்து வாலிபர் சாவு 7 வாலிபருக்கு 11 ஆண்டு சிறை
ADDED : செப் 27, 2011 11:58 PM
திருவாரூர்: உயிருக்கு பயந்து குளத்தில் டூவீலரோடு விழுந்து வாலிபர் இறந்த வழக்கில், ஏழு வாலிபர்களுக்கு தலா 11 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து திருவாரூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி போலீஸ் சரகம், காவனூர் கிராமத்தை சேர்ந்த தங்கையன் மகன் சுரேஷ் (28). கடந்த 2008 ஜன., 10ம் தேதி, இக்கிராமத்தில் உள்ள பெண்களை சுரேஷ் கிண்டல், கேலி செய்துள்ளார். அப்பெண்கள் ஊருக்குள் சென்று சொல்ல, ஊரில் இருந்து ஒரு கும்பல் சுரேஷை பிடிப்பதற்காக வந்தது. அப்போது சுரேஷ், தனது ஹோண்டா டூவீலரில் திருவாரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்து பிடிக்க அக்கும்பல் துரத்தியது. அதைக்கண்டு பயந்துபோன சுரேஷ், உயிருக்கு பயந்து படுவேகமாக சென்று, அம்மையப்பன் என்ற இடத்தில் சாலையோரத்தில் இருந்த குளத்தில் பாய்ந்து இறந்தார். தற்கொலைக்கு தூண்டுதல், ஒன்றுக்கும் மேற்பட்டோர் கூடி கலவரத்தை ஏற்படுத்துதல் பிரிவுகளின் கீழ் கொராடாச்சேரி போலீஸார் வழக்குப்பதிந்து, காவனூரை சேர்ந்த கிருஷ்ணகுமார், மகேஸ்வரன், சுந்தரமூர்த்தி , ராஜேந்திரன் , கேசவன் , தமிழரசன் , கார்த்திக் ஆகிய ஏழு பேரைக் கைது செய்தனர். இவ்வழக்கில் இறுதி விசாரணை நேற்று திருவாரூர் சார்பு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் சரவணச்செல்வன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி கணேசன், குற்றவாளிகள் ஏழு பேருக்கும், தற்கொலைக்கு தூண்டிய பிரிவில், தலா 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா 10 ஆயிரமும் அபராதமும், கலவரத்தை ஏற்படுத்திய பிரிவில், தலா ஓராண்டு சிறைத்தண்டனையும், தலா 5,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.