ADDED : செப் 03, 2011 01:44 AM
கடலூர் : கடலூர் ரோட்டரி துணை ஆளுனர் நடராஜனுக்கு 'பாபு ஜெகஜீவன் ராம் விருது' வழங்கப்பட்டுள்ளது.
பாரதீய தலித் சாகித்ய அகாடமியின் 8வது மாநில மாநாடு வேளாங்கண்ணியில் நடந்தது.
இதில் ரோட்டரி துணை ஆளுனர் கடலூர் நடராஜனுக்கு ஏழை எளிய மற்றும் பின் தங்கிய மக்களுக்கான சிறந்த சேவை செய்ததற்காக 'பாபு ஜெகஜீவன் ராம் விருது' வழங்கப்பட்டது. விருதினை தேசியத் தலைவர் சுமனாக்ஷா வழங்கினார்.மாநிலத் தலைவர் கோபிசுந்தர், வக்கீல் சந்திரசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.