/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/தியாகதுருகம் தி.மு.க., இரண்டாக. எதிரணி வேட்பாளர்கள் திடீர் உற்சாகம்தியாகதுருகம் தி.மு.க., இரண்டாக. எதிரணி வேட்பாளர்கள் திடீர் உற்சாகம்
தியாகதுருகம் தி.மு.க., இரண்டாக. எதிரணி வேட்பாளர்கள் திடீர் உற்சாகம்
தியாகதுருகம் தி.மு.க., இரண்டாக. எதிரணி வேட்பாளர்கள் திடீர் உற்சாகம்
தியாகதுருகம் தி.மு.க., இரண்டாக. எதிரணி வேட்பாளர்கள் திடீர் உற்சாகம்
ADDED : அக் 04, 2011 12:16 AM
தியாகதுருகம் : தியாகதுருகம் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு தி.மு.க., வேட்பாளரை எதிர்த்து அக்கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளர் தனது மனைவியை சுயேச்சையாக களம் இறக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதே போல் விழுப்புரத்தில் அ.தி.மு.க.,வில் சீட் கிடைக்காத அதிருப்தியில் முன்னாள் நகர செயலாளர் நூர்முகமது சுயேச்சையாக தேர்தலில் குதித்துள்ளார். தியாகதுருகம் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட தி.மு.க., சார்பில் நகர செயலாளர் பொன்ராமகிருஷ்ணன் பேத்தி அருணா மணிமாறனுக்கு கட்சி சார்பில் சீட் ஒதுக்கப்பட்டது. இவர் தற்போது பேரூராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார். கட்சியின் மூத்த நிர்வாகியான பொன்ராமகிருஷ்ணன், அக்கட்சியின் தலைவர்களின் நன்மதிப்பை பெற்றவராக இருந்து வருகிறார்.இவரின் பரிந்துரையின் மூலம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தியாகதுருகம் ஒன்றிய செயலாளராக சதா மகாலிங்கம் நியமிக்கப்பட்டார். கட்சி நடவடிக்கை அனைத்திலும் பொன்ராமகிருஷ்ணன் உடன் சதாமகாலிங்கம் இணைந்து செயல்பட்டு வந்தார்.கடந்த உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலராக வெற்றிபெற்ற சதாமகாலிங்கத்தின் மனைவி ஆண்டாள் சேர்மன் பதவிக்கான தி.மு.க., வேட்பாளாராக அறிவிக்கப்பட்டார். சேர்மன் பதவிக்கு நடந்த தேர்தலில் பெரும்பான்மையான ஒன்றிய கவுன்சிலர்களின் ஓட்டுகளை பெற்று காந்திமதி கண்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். தி.மு.க., கவுன்சிலர்கள் பலர் வெற்றிபெற்றும் அவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் சதாமகாலிங்கம் தோல்வியடைந்ததால் சேர்மன் பதவியை பிடிக்க முடியாமல் போனது.இது மாவட்ட செயலாளர் பொன்முடிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக சதாமகாலிங்கத்தின் ஒன்றிய செயலாளர் பதவி பறிக்கப்பட்டு வசந்தம் கார்த்திகேயனுக்கு கொடுக்கப்பட்டது. இதனால் விரக்தியடைந்த சதாமகாலிங்கம் கட்சி நடவடிக்கையில் இருந்து கடந்த 2 ஆண்டுகளாகவே பட்டும் படாமல் இருந்து வந்தார்.இந்நிலையில் சதாமகாலிங்கம் தியாகதுருகம் நகர அரசியலில் நுழைய திட்டமிட்டார். அதன் படி பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட தியாகதுருகம் பேரூராட்சி தலைவர் பதவியை, தி.மு.க., சார்பில் போட்டியிட தனது மனைவி ஆண்டாளுக்கு கிடைக்க முயற்சி எடுத்தார். அதை கட்சி தலைமை நிராகரித்து தற்போதய பேரூராட்சி தலைவர் அருணாமணிமாறனை மீண்டும் வேட்பாளராக அறிவித்தது. அதிருப்தியடைந்த சதா மகாலிங்கம் தனது மனைவி ஆண்டாளை சுயேச்சையாக வேட்பு மனுதாக்கல் செய்தார்.
இவரை சமாதானபடுத்த நடந்த முயற்சிகள் தோல்வியடைந்தது. இதனால் தியாகதுருகம் தி.மு.க., இரண்டாக பிளவுபட்டுள்ளது. நிர்வாகிகள் சிலர் இவருக்கு ஆதரவாக பிரசாரத்தில் இறங்கியுள்ளானர். இதற்கிடையே பொன்ராமகிருஷ்ணன் தரப்பில் பிரசாரத்தை துவக்குவதில் காலதாமதம் ஏற்படுவது கட்சியினரிடையே அதிருப்தியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க., வில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிளவால் அதிருப்தி ஓட்டுக்களில் பெரும்பகுதி தங்களுக்கு கிடைக்குமென அ.தி.மு.க., மற்றும் தே.மு. தி.க., வேட்பாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


