/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சுயேட்சைகளுக்கு 30 சின்னங்கள் ஒதுக்கீடுசுயேட்சைகளுக்கு 30 சின்னங்கள் ஒதுக்கீடு
சுயேட்சைகளுக்கு 30 சின்னங்கள் ஒதுக்கீடு
சுயேட்சைகளுக்கு 30 சின்னங்கள் ஒதுக்கீடு
சுயேட்சைகளுக்கு 30 சின்னங்கள் ஒதுக்கீடு
ஈரோடு :அங்கீகரிக்கப்பட்ட கட்சி சின்னங்கள் தவிர, சுயேட்சையாக போட்டியிடுபவர்களுக்காக 30 சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சுயேட்சையாக போட்டியிடுபவர்களுக்கா, கிடார் (இசைக்கருவி), அடையாளக்குறி (பேட்ஜ்), மறை திருக்கி (ஸ்பேனர்), வைரம், உலக உருண்டை, முகம் பார்க்கும் கண்ணாடி, அசைந்தாடும் நாற்காலி, புட்டி (பாட்டில்), ஊஞ்சல், நீர்குவளை (மக்), சாலை உருளை (ரோடு ரோலர்), பூப்பந்து மட்டை, திருகுஆணி, மேற்சட்டை (கோட்), அலமாரி, முள் கரண்டி (ஃபோர்க்), கொதி கெண்டி (கெட்டில்), ஹாக்கி மட்டையும் பந்தும், மகளிர் பணப்பை, மேஜை விளக்கு, கொம்பு (ஊதும் இசைக்கருவி), கைப்பை, தீப்பெட்டி, கழுத்து கச்சு (கழுத்தில் கட்டும் டை), அலமாரி, குலையுடன் கூடிய தென்னைமரம், அரிக்கேன்விளக்கு, கரண்டி, தண்ணீர் குழாய், உலாவும் தடி (வாக்கிங் ஸ்டிக்) ஆகிய 30 சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சுயேட்சை வேட்பாளர்கள் இவற்றில் ஏதாவது மூன்றை வரிசைப்படி, வேட்பு மனுவில் குறிப்பிட வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இணைந்து ஒரே சின்னத்தை கோராத நிலையில், முதலில் கோரப்பட்ட சின்னமும், அல்லது அதற்கடுத்த சின்னங்களும் வழங்கப்படும்.