/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகம் முற்றுகைகுடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகம் முற்றுகை
குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகம் முற்றுகை
குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகம் முற்றுகை
குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகம் முற்றுகை
ADDED : செப் 20, 2011 09:34 PM
சாத்தூர்: சாத்தூர் நகராட்சி அலுவலகத்தை குடிநீர் கேட்டு, காலிகுடங்களுடன்
பெண்கள் முற்றுகையிட்டனர்.சாத்தூர் நகராட்சி ஒன்பதாவது வார்டு கான்வென்ட்
தெற்கு தெரு, வடக்கு புது தெரு, காட்டுப் புது தெரு பகுதியில், கடந்த ஆறு
மாதங்களாக குடிநீர் விநியோகம் சீராக வழங்கவில்லை.
கடந்த மூன்று மாதங்களாக
பொதுக்குடிநீர் குழாயில் குடிநீர் பிடிக்கும் பெண்களை, சிலர் மிரட்டி
விரட்டியது தொடர்பாக, இப்பிரச்னையில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க
வேண்டுமென வலியுறுத்தி, பெண்கள் பலர் காலி குடங்களுடன் நகராட்சி
அலுவலகத்தை முற்றுகையிட்டனர். குடிநீர் குழாயில் மோட்டார் பொருத்தி
மேல்நிலைதொட்டியில் சிலர் நிரப்புகின்றனர். அவர்கள் மீதும் நடவடிக்கை
எடுக்க வேண்டுமென, மறியலில் ஈடுபட்ட பெண்கள், அதிகாரிகளிடம்
வலியுறுத்தினர். நகராட்சி பொறியாளர் வாசுதேவன், ஒன்பதாவது வார்டு
கவுன்சிலர் ராசாக்குட்டி பேச்சு வார்த்தை நடத்தினர். ''இரண்டு நாளில் புதிய
குழாய்கள் பதித்து, சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும்'' என, நகராட்சி
பொறியாளர் வாசுதேவன் கூறியதின்படி, பெண்கள் கலைந்து சென்றனர்.