ADDED : ஜூலை 27, 2011 11:28 PM
சின்னசேலம் : பசுமை தாயகம் சார்பில் மரக் கன்றுகள் நடும் விழா நடந்தது.சின்னசேலம் அடுத்த வீ.கூட்ரோடு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி மற்றும் மேல்நாரியப்பனூர் அரசு மருத்துவமனைப் பகுதியில் மரக் கன்றுகள் நடு விழா நடந்தது.விழாவிற்கு மயில்வண்ணன் தலைமை தாங்கினார்.
கலியவரதன், மணிவண்ணன், அமுதமொழி மரக் கன்றுகள் நட்டு துவக்கி வைத்தனர். இதில் ஒன்றிய செயலாளர் கோவிந்தன், சவுந்தராஜன், மாரியப்பன், ராமு, காசி, வடிவேல், ஜவகர்லால் கலந்து கொண்டனர்.