உக்ரைன் நிலக்கரி சுரங்க விபத்தில் 17 பேர் பலி
உக்ரைன் நிலக்கரி சுரங்க விபத்தில் 17 பேர் பலி
உக்ரைன் நிலக்கரி சுரங்க விபத்தில் 17 பேர் பலி
ADDED : ஜூலை 30, 2011 03:15 AM
கிவிவ்: உக்ரைன் நாட்டில் இரு வேறு நிலக்கரி சுரங்கங்களில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 17 பேர் பலியாயினர்.
12 பேர் படுகாயமடைந்தனர். உக்ரைன் நாட்டில் லுகான்ஸ்க் எனும் மாகாணத்தில் ஷிகோடோல்ஸக்யா, வோஸ்டோசைன்யா என்ற இரு நிலக்கரி சுரங்கங்கள் உள்ளது. இங்கு 600-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நேற்று பணியாற்றி கொண்டிருந்தனர். அபோது அதிகாலை 2 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் 17 பேர் பலியானர், 12 பேர் காயமடைந்தனர். மேலும் 28 பேர் காணவில்லை என அந்நாட்டு பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தெரிவித்தார். சம்பவ இடத்தில் மீட்புப்படையினர் , சுரங்கத்தின் மிகவும் அழமான பகுதிகளில் உள்ள மற்ற ஊழியர்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் பலியானவர்களுக்கு உக்ரைன் அதிபர் விக்டர் யானுகோவைச் இரங்கல் தெரிவித்துள்ளார்.