திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் :எம்.எல்.ஏ., அலுவலகத்துக்கு பூட்டு
திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் :எம்.எல்.ஏ., அலுவலகத்துக்கு பூட்டு
திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் :எம்.எல்.ஏ., அலுவலகத்துக்கு பூட்டு
ADDED : செப் 14, 2011 01:19 AM
திருச்சி :திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது.இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம் பூட்டப்பட்டு, தேர்தல் அதிகாரிகளிடம், சாவி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆனால், எம்.எல்.ஏ., அலுவலகத்துக்கு 'சீல்' வைக்கப்படவில்லை.இதுகுறித்து தேர்தல் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ''கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன், மார்ச் மாதம் எம்.எல்.ஏ., அலுவலகம் பூட்டப்பட்டது. அதன்பின், மே மாதம் திறக்கப்பட்டது. அமைச்சர் மரியம்பிச்சை இறந்ததால், அதன்பின் பூட்டியே தான் இருக்கிறது. தூசிப்படிந்துள்ளது. தற்போது யாரும் அங்கு இல்லை. யாராவது இருந்தால், சந்தேகம் ஏற்பட்டால், 'சீல்' வைக்கலாம். யாருமே இல்லாத அலுவலகத்துக்கு 'சீல்' வைக்க வேண்டிய அவசியம் இல்லை. புதிய எம்.எல்.ஏ., வந்த பிறகு அந்த அலுவலகம் மீண்டும் அவர் வசம் ஒப்படைக்கப்படும்,'' என்றார்.