/உள்ளூர் செய்திகள்/கடலூர்/குறிஞ்சிப்பாடியில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகுறிஞ்சிப்பாடியில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி
குறிஞ்சிப்பாடியில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி
குறிஞ்சிப்பாடியில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி
குறிஞ்சிப்பாடியில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி
ADDED : ஆக 03, 2011 10:02 PM
குறிஞ்சிப்பாடி : குறிஞ்சிப்பாடியில் சிலம்பாட்டப் போட் டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கப் பட்டது.
கடலூர் மாவட்ட சிலம்பாட்ட கழகம், குறிஞ்சிப்பாடிஒன்றிய சிலம்பாட்ட கழகம் சார்பில் குறிஞ்சிப்பாடியில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் நடந்தது. மாவட்ட சிலம்பாட்ட கழக தலைவர் குப்புசாமி தலைமை தாங்கினார். குறிஞ்சிப்பாடி சிலம்பாட்ட கழக செயலாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம், தமிழ்நாடு சிலம்பாட்ட கழக செயலர் சிதம்பரம், தலைமை ஆசிரியர் தெய்வசிகாமணி ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர்.
மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில் சிலம்பம் ஆசிரியர் குப்புசாமி எழுதிய தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலைகள் என்ற நூலை சொரத்தூர் ராஜேந்திரன் எம்.எல். ஏ., வெளியிட நெய்வேலி டி.எஸ்.பி., மணி பெற்று கொண்டார். போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.