Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/பாலம் இன்றி தத்தளிப்பு காற்றில் பறந்த வாக்குறுதி

பாலம் இன்றி தத்தளிப்பு காற்றில் பறந்த வாக்குறுதி

பாலம் இன்றி தத்தளிப்பு காற்றில் பறந்த வாக்குறுதி

பாலம் இன்றி தத்தளிப்பு காற்றில் பறந்த வாக்குறுதி

ADDED : ஆக 30, 2011 02:01 AM


Google News

தாடிக்கொம்பு:தாடிக்கொம்பு அருகே ஆத்துப்பட்டியில் ஆற்றை கடக்க பாலம் இல்லாததால், கிராமத்தினர் பரிதவிகின்றனர்.

விட்டல்நாயக்கன்பட்டியில் இருந்து 2 கி.மீ., தூரம் குடகனாற்றை கடந்து ஆத்துப்பட்டி செல்ல வேண்டும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நீர் சூழ்ந்தது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டு தீவு போல் மாறியது. ஆற்றை கடக்க முயன்ற இரு வாலிபர்கள் இழுத்து செல்லப்பட்டனர். ஓராண்டிற்கு முன், வயிற்றுப்போக்கால் மூவர் பாதிக்கப்பட்டனர். ஆற்றில் நீர் சென்றதால், 108 ஆம்புலன்ஸ், டாக்டர்களும் வர மறுத்து, திரும்பி சென்றனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டதால் மூவரும் இறந்தனர். ஆறுதல் கூற வந்த அரசியல்வாதிகள், பாலம் அமைத்து தருவதாக வாக்குறுதி வழங்கினர். ஆனால் மாதங்கள் சென்றதே தவிர பாலத்திற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.தற்போது மழையால் ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. ஆற்றை கடக்க பாலம் அமைத்து, உயிரிழப்புகளை தவிர்க்க வேண்டும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us