/உள்ளூர் செய்திகள்/திருச்சி/முதியோர் உதவித்தொகைக்காக 5 ஆண்டாக போராடும் மூதாட்டிகள் : கலெக்டர் கரிசனம் காட்டுவாரா?முதியோர் உதவித்தொகைக்காக 5 ஆண்டாக போராடும் மூதாட்டிகள் : கலெக்டர் கரிசனம் காட்டுவாரா?
முதியோர் உதவித்தொகைக்காக 5 ஆண்டாக போராடும் மூதாட்டிகள் : கலெக்டர் கரிசனம் காட்டுவாரா?
முதியோர் உதவித்தொகைக்காக 5 ஆண்டாக போராடும் மூதாட்டிகள் : கலெக்டர் கரிசனம் காட்டுவாரா?
முதியோர் உதவித்தொகைக்காக 5 ஆண்டாக போராடும் மூதாட்டிகள் : கலெக்டர் கரிசனம் காட்டுவாரா?
ADDED : ஆக 22, 2011 02:27 AM
மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்துள்ள வையம்பட்டி தெற்கு
அஞ்சல்காரன்பட்டியைச் சேர்ந்தவர்கள் செவ்வந்தியம்மாள் (76), அமுல்மேரி
(70), ஆரோக்கியமேரி (65). ஆதரவற்றவர்களாக உள்ள இவர்கள் மூவரும் அருகருகே
குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். கணவனை இழந்த மூதாட்டிகளை வாரிசுகள்
மற்றும் உறவினர்களால் கண்டுக்கொள்ளாமல் உள்ளனர். ஆகையால் மூவரும் இந்த
வயதிலும் தங்களால் இயன்ற வேலைகளை செய்து, அதில் கிடைக்கும் சொற்ப
வருமானத்தை வைத்தே ஜீவனம் நடத்தி வருகின்றனர்.
கண்பார்வை மங்கிவிட்டாலும், மனம் தளராது தங்கள் வா ழ்க்கையை நடத்தி
வருகின்றனர். கடந்த தி.மு.க., ஆட்சியில் முதியோர்களுக்கு உதவித்தொகை
வழங்குவதாக அறிவித்து அதில் பயன்பெற அந்தந்த கிராம பஞ்சாயத்துகள் மற்றும்
வருவாய்த்துறையினரிடமும் மனு கொடுக்கலாம் என கூறியிருந்தது.
கண்பார்வை குறைவு என்பதால் மூதாட்டிகள் மணப்பாறையிலுள்ள தாலுகா அலுவலகத்து
க்கு மனு கொடுக்க வர இயலா து என பஞ்சாயத்து நிர்வாகத்திட ம் உதவித்தொகை
கேட்டு மனு கொடுத்தனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்த ஒவ்வொரு
கிராமசபைக்கூட்டத்திலும் உதவித்தொகை கேட்டு மனுகொடுத்து ம் இதுவரை எவ்வித
உதவியும் கிடைக்கவில்லை. இவர்களுக்கு உதவித்தொகை பெற்றுத்தருவத ற்கு
பஞ்சாயத்து நிர்வாகமோ, வ ருவாய்த்துறையினரோ எவ்வித
நடவடிக்கையும்எடுக்கவில்லை.
மூதாட்டி செவ்வந்தியம்மாள் கூறியதாவது: கடந்த 5 ஆண்டாக முதியோர் உதவித்
தொகைக்காக கிராம சபைக்கூட்டத்தில் மனு கொடுத்தும் வருகிறேன். கண்பார்வை
குறைந்து விட்டாலும், நடக்க முடியாத நிலையில் ஊன்றுகோல் உதவியுடன் சென்று
வருகிறேன். கணவர் பாக்கியம் கடந்த இர ண்டு ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார்.
தற்போது மிகவும் சிரமமாக உள்ளது. எங்கள் ஊரு க்கு தபால்காரர்
வரும்போதெல்லாம் உதவித்தொகை கொண்டு வந்துவிட்டார் என எதிர்பா ர்ப்பேன்.
ஆனால் ஒவ்வொரு மு றையும் ஏமாற்றமே மிஞ்சியது. இவ்வாறு அவர் கூறினார்.
தற்போதைய அ.தி.மு.க., அரசு முதியோர் உதவித்தொகை யை ஆயிரம் ரூபாயாக
உயர்த்தியுள்ளது. பயனாளிகளுக்கு புகை ப்படம் எடுக்கும் பணி நடந்து
வருகிறது. ஆனால் கடந்த சுதந்திரத்தினத்தன்று நடந்த கிராமசபைக்
கூட்டத்திலும் மனு கொடுத்துவிட்டு, உதவிக்காக காத்திருக்கும்
மூதாட்டிகளுக்கு உதவித்தொகை பெற்றுத்தர அதிகாரிகள் முன்வருவார்களா? என்பது
சந்தேகமாக உள்ளது.
எனவே, கஷ்டப்படுபவர்களின் நலனில் அதிக அக்கறையுடன் செயல்பட்டு வரும்,
கலெக்டர் ஜெயஸ்ரீமுரளிதரன், அரசு அதிகாரிகள் மூலம், மூதாட்டிகளின் வயதை
கருத்தில் கொண்டு, அலைச்சல் இல்லாமல் முதியோர் உதவித்தொகை கிடைக்க
நடவடிக்கை எடுக்கவேண்டும்.