Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/விவசாய உற்பத்தி இருமடங்காக உயர்த்தப்படும் விவசாயிகளிடம் ஆணையர் சந்திப் சக்சேனா உறுதி

விவசாய உற்பத்தி இருமடங்காக உயர்த்தப்படும் விவசாயிகளிடம் ஆணையர் சந்திப் சக்சேனா உறுதி

விவசாய உற்பத்தி இருமடங்காக உயர்த்தப்படும் விவசாயிகளிடம் ஆணையர் சந்திப் சக்சேனா உறுதி

விவசாய உற்பத்தி இருமடங்காக உயர்த்தப்படும் விவசாயிகளிடம் ஆணையர் சந்திப் சக்சேனா உறுதி

ADDED : ஜூலை 15, 2011 12:56 AM


Google News

கடலூர் : தமிழ்நாட்டில் வரும் 5 ஆண்டுகளில் விவசாய உற்பத்தி இருமடங்காக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேளாண் துறை ஆணையர் சந்திப் சக்சேனா கூறினார்.



தமிழ்நாடு வேளாண்மை துணை ஆணையர் சந்திப் சக்சேனா நேற்று காலை கடலூர் மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

இதில் வேளாண் இணை இயக்குனர் இளங்கோவன், விவசாயிகள் ரவீந்திரன், கார்மாங்குடி வெங்கடேசன், குமார், நரசிம்மன் உள்பட பலர் பங்கேற்றனர். ஆணையரை சந்தித்த விவசாயிகள், மாவட்டத்தில் டி.ஏ.பி., உரம் தட்டுபாடு உள்ளதாக தெரிவித்தனர். இதற்கு இணை இயக்குனர் தற்போது 1500 டன் உரம் வந்துள்ளது. உடன் அனைத்து தொடக்க வேளாண்ணை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விநியோகம் செய்யப்படும் என பதிலளித்தார்.



மேலும் விவசாய கருவிகள், டிராக்டர், நெல் அறுவடை இயந்திரங்கள் வழங்க வேண்டும். விளை பொருட்களுக்கு சரியான நேரத்தில் விற்பனை வாய்ப்புகளை ஏற்படுத்தி தரவேண்டும், கடலூர் வட்டார பகுதியில் விதை சுத்திகரிப்பு நிலையம் அமைத்துக்கொடுக்கவேண்டும் என கூறினார். இதற்கு பதிலளித்து சந்திப் சக்சேனா பேசியதாவது: தற்போது உரம் பற்றாக்குறை, வேளாண்மை இயந்திரங்கள், விளை பொருட்களை விற்பனை செய்ய வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும். இந்த மூன்று பிரச்னைகளுக்கும் விரைவில் தீர்வு காணப்படும். விவசாயிகள் நலன் கருதி ஒவ்வொரு ஒன்றியத்திலும் தொடுதிரை வசதி கொண்ட கம்ப்யூட்டர் வசதி ஏற்படுத்தி தரப்படும்.



இவற்றில் உரம் இருப்பு, தட்பவெப்ப நிலை, மண்ணிற்கு தகுந்த விதை பயன்படுத்துவதற்காக வழிமுறைகள், மாநில முழுவதும் விவசாய பொருட்களின் சந்தை மதிப்பு அனைத்து விபரங்கள் அடங்கிய தொடுதிரை அமைக்கப்படும். இவற்றில் விவசாயிகள் தங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்தால் உடனுக்குடன் தகவல்கள் தெரிவிக்கப்படும். விவசாயிகளுக்கு கடன் வழங்க அனைத்து வங்கிகளும் உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் 5 ஆண்டுகளில் விவசாய உற்பத்திய இரு மடங்காக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பேசினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us