ADDED : ஜூலை 17, 2011 01:40 AM
சேத்தியாத்தோப்பு : பஸ்சின் பின்னால் நின்றிருந்தவர், பஸ் சக்கரத்தில் சிக்கி இறந்தார்.
இதனைக் கண்டித்து நடந்த சாலை மறியல் தொடர்பாக 20 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.சேத்தியாத்தோப்பு அடுத்த சின்னநெல்லிக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் அரசன், 41. விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு சேத்தியாத்தோப்பில் இருந்து எறும்பூர் கிராமத்திற்கு மினி பஸ்சில் சென்றார்.எறும்பூர் பஸ் நிறுத்தத்தில் இறங்கிய அரசன், பஸ்சின் பின்னால் நின்று கொண்டிருந்தார். அதனை கவனிக்காமல் பஸ் டிரைவர் பஸ்சை பின்னால் எடுத்தார். அதில் பஸ்சின் பின் சக்கரம் அரசன் மீது ஏறியது. அதில் அவர் உடல் நசுங்கி அதே இடத்தில் இறந்தார்.இதனை அறிந்த அரசனின் உறவினர் கணேசன், கண்ணன் உள்ளிட்ட 20 பேர் எறும்பூர் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.விபத்து மற்றும் சாலை மறியல் குறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் தனித்தனியே வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.