ஒரு ரூபாய் விண்ணப்பம் 100 ரூபாய்க்கு விற்பனை
ஒரு ரூபாய் விண்ணப்பம் 100 ரூபாய்க்கு விற்பனை
ஒரு ரூபாய் விண்ணப்பம் 100 ரூபாய்க்கு விற்பனை
ADDED : செப் 29, 2011 09:43 PM
திண்டிவனம் : திண்டிவனம் நகராட்சியில் மனு தாக்கல் செய்ய, விண்ணப்பத்திற்கு 100 ரூபாய் வசூலிக்கப்பட்டது குறித்து, தேர்தல் கமிஷனுக்கு புகார் அனுப்பப்பட உள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை அந்தந்த உள்ளாட்சிகளே வேட்பாளர்களுக்கு வழங்கும். இதன் விலை ஒரு ரூபாய். விழுப்புரம் நகராட்சியிலும், ஒலக்கூர் ஒன்றியத்திலும் ஒரு ரூபாய் விலையில் தான் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.
திண்டிவனம் நகராட்சியில் மட்டும், இந்த விண்ணப்பம், 100 ரூபாய் என, விற்பனை செய்யப்பட்டுள்ளது. போட்டியிடும் வேட்பாளர்கள் இது குறித்து தெரியாமலேயே, விண்ணப்பங்களை பெற்றுச் சென்றுள்ளனர். நகராட்சித் தலைவர் பதவிக்கும், 33 வார்டுகளுக்கும் இதுவரை 250 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதனால், அதிகப்படியாக 25 ஆயிரம் ரூபாய் வரை நகராட்சி அலுவலர்கள் வசூல் செய்துள்ளனர். இந்த பிரச்னை குறித்து தேர்தல் கமிஷனுக்கு புகார் அனுப்ப உள்ளதாக, வேட்பாளர்கள் தெரிவித்தனர்.