ADDED : ஆக 05, 2011 03:18 AM
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த நல்லூர் அரசு மேல்நிலை பள்ளியில்
அறிவியல் கண்காட்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் ராமதாஸ் தலைமை தாங்கி
கண்காட்சியை துவக்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் நாகசாமி முன்னிலை
வகித்தார். ஆசிரியர்கள் சரவணச்செல்வி, தேன்மொழி, கண்ணன், ராஜேந்திரன்,
தமிழ்காந்தி மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.