/உள்ளூர் செய்திகள்/சென்னை/திட்டமிட்டபடி அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல்திட்டமிட்டபடி அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல்
திட்டமிட்டபடி அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல்
திட்டமிட்டபடி அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல்
திட்டமிட்டபடி அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல்
ADDED : ஆக 05, 2011 02:34 AM
சென்னை : உள்ளாட்சித் தேர்தல், திட்டமிட்டபடி அக்டோபர் மாதத்தில் நடைபெறும் என, பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் முடிவடையும் தருவாயில் உள்ளதால், அதற்கான தேர்தல்கள், வரும் அக்டோபர் மாதம் திட்டமிட்டபடி நடத்தப்படும்.
கிராம ஊராட்சிகளில் உள்ள பல உறுப்பினர் வார்டுகள், ஒரு உறுப்பினர் வார்டுகளாக மாற்றப்படும் எனவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.மாநில நிதிக் குழுவின் பரிந்துரைப்படி, அரசின் சொத்து வரி வருவாயிலிருந்து 10 சதவீதம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது. 2011-12ம் ஆண்டுக்கான இத்தொகை 6,509 கோடி ரூபாய். அடுத்த நிதியாண்டிலிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கும் நிதிப் பகிர்வு, நான்காவது மாநில நிதிக் குழு அளிக்கும் பரிந்துரைகளுக்குப் பின்னர் முடிவு செய்யப்படும் என்றும், பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.