/உள்ளூர் செய்திகள்/கடலூர்/இலவச கண் சிகிச்சை முகாம் 48 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வுஇலவச கண் சிகிச்சை முகாம் 48 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு
இலவச கண் சிகிச்சை முகாம் 48 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு
இலவச கண் சிகிச்சை முகாம் 48 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு
இலவச கண் சிகிச்சை முகாம் 48 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு
ADDED : ஜூலை 27, 2011 11:09 PM
புவனகிரி : புவனகிரி அடுத்த பு.உடையூரில் நடந்த இலவச கண் சிகிச்சை முகாமில் 48 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.அண்ணாமலை நகர் அரிமா, லியோ சங்கம், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாமில் அரிமா சங்கத் தலைவர் திருமுருகு வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக அரிமா கணேஷ், மாவட்ட நிர்வாகிகள் நாகப்பன், சரவணகுமார், லியோ தலைவர் மணிகண்டன் பங்கேற்றனர்.முகாமில் டாக்டர்கள் சுமிதா, திருவேணி தலைமையில் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். முகாமில் 204 பேர் பயனடைந்தனர். 48 பேர் இலவச கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் திருவேங்கடம், செந்தில் குடும்பத்தினர் செய்திருந்தனர்.