Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/காவிரியில் மணல் அள்ளிய தி.மு.க., எம்.எல்..ஏ., கைது

காவிரியில் மணல் அள்ளிய தி.மு.க., எம்.எல்..ஏ., கைது

காவிரியில் மணல் அள்ளிய தி.மு.க., எம்.எல்..ஏ., கைது

காவிரியில் மணல் அள்ளிய தி.மு.க., எம்.எல்..ஏ., கைது

UPDATED : செப் 19, 2011 07:18 PMADDED : செப் 19, 2011 04:19 PM


Google News
Latest Tamil News
கரூர் : மாயனூர் காவிரி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக, தி.மு.க., எம்.எல்.ஏ., மதியம் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., பழனிசாமி. பெரும் தொழிலதிபரான இவர், தி.மு.க., மாநில சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினராகவும் உள்ளார். கடந்த ஆட்சியில், கரூர் மாவட்டத்தில் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக இவர் மீது ஏராளமான புகார்கள் கூறப்பட்டன. ஆனால், ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால் எந்த விஷயமும் வெளியே வரவில்லை. மேலும், அனுமதிக்கப்பட்ட இடம் தவிர, பல இடங்களில் மணல் அள்ளி கொள்ளை நடந்ததாக, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, கடந்த சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின் போது குற்றஞ்சாட்டி பேசினார்.

இந்நிலையில், கடந்த 14ம் தேதி, மாயனூர் காவிரி ஆற்றுப் பகுதிகளில் பழனிசாமி அனுமதியின்றி மணல் அள்ளியதாக மாயனூர் (பொறுப்பு) வி.ஏ.ஓ., நீலமேகம், மாயனூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். காவிரியாறு அரசு புறம்போக்கு நிலத்தில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக பழனிசாமி, சுந்தரேசன், கிரிராஜ், ரெங்கராஜபுரம் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த ரவிராஜா, ராஜா, சசிகுமார், குமார் ஆகிய ஏழு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.டி.எஸ்.பி.,க்கள் கரூர் மனோகரன், குளித்தலை இளங்கோ, இன்ஸ்பெக்டர்கள் மாயனூர் சுப்பையா, கரூர் டவுன் முகேஷ் மற்றும் போலீசார், நேற்று மதியம் மாயனூரில் உள்ள பழனிசாமிக்கு சொந்தமான கே.சி.பி., பேக்கேஜ் கம்பெனிக்கு சென்றனர்.

கம்பெனியிலிருந்து மதியம் 2.45 மணிக்கு பழனிசாமி வெளியே வந்தார். அப்போது, போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். குளித்தலை இரண்டாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் பழனிசாமியை ஆஜர்படுத்தினர்.மாஜிஸ்திரேட் தனசேகரன், அக்டோபர் 3ம் தேதி வரை அவரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். போலீசார் அவரை பலத்த பாதுகாப்புடன், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.. பழனிசாமியைத் தவிர, தலைமறைவாக உள்ள மற்ற ஆறு பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

தமிழக சட்டசபை தேர்தலின் போது, 'மணல் கொள்ளையை தடுத்து நிறுத்துவேன். மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, மணல் வளம் சுரண்டப்படுவதை தடுத்து நிறுத்துவேன்' என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.அதன்படி, மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க, தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். கரூர் மாவட்டத்தில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய பழனிசாமி தற்போது கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், தமிழகத்தில் உள்ள பிற மணல் கொள்ளையர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாயனூரில் கே.சி.பி., யை கைது செய்து அங்குள்ள காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். இது பொய் வழக்கு சட்டப்படி சந்திப்பேன் என போலீசார் அழைத்து செல்லும் போது கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us