/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விவசாயிகளுக்கு இலவசமாக தேக்கு, சவுக்கு மரக் கன்றுகள்விவசாயிகளுக்கு இலவசமாக தேக்கு, சவுக்கு மரக் கன்றுகள்
விவசாயிகளுக்கு இலவசமாக தேக்கு, சவுக்கு மரக் கன்றுகள்
விவசாயிகளுக்கு இலவசமாக தேக்கு, சவுக்கு மரக் கன்றுகள்
விவசாயிகளுக்கு இலவசமாக தேக்கு, சவுக்கு மரக் கன்றுகள்
ADDED : ஜூலை 13, 2011 01:07 AM
கள்ளக்குறிச்சி : தனியார் நிலங்களில் காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ்
இலவசமாக விவசாயிகளுக்கு மரக் கன்றுகள் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி வன
அலு வலகத்தில் விழாவில் மாவட்ட வன அலுவலர் மணி விவசாயிகளுக்கு தேக்கு
மற்றும் சவுக்கு மரக் கன்றுகளை வழங்கினார். வனசரகர் தமிழரசு, அன்பழகன்,
முருகானந்தம் உடனிருந்தனர்.பின்னர் மாவட்ட வன அலுவலர் மணி கூறியதாவது
:தமிழகத்தில் வனத்துறை மூலம் தனியார் நிலங்களிலும் கடந்த சில ஆண்டுகளாக
மரக் கன்றுகள் நடப்பட்டு வருகிறது.கள்ளக்குறிச்சி பகுதியில் தலா ஒரு லட்சம்
தேக்கு மற்றும் சவுக்கு மர கன்றுகள் உற்பத்தி செய்து தயார் நிலையில்
உள்ளது. இரண்டரை ஏக்கருக்கு 500 தேக்கு, ஒரு ஏக்கருக்கு 400 சவுக்கு மரக்
கன்றுகள் இலவசமாக விவசாயிகளிடம் வழங்கப்படுகிறது. இவற்றின் பராமரிப்பு செல
வுக்கு 1,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.மர கன்றுகள் தேவையான
விவசாயிகள் வனவர் முருகானந்தம் மொபைல் எண்: 94884 72656 மூலம் தொடர்பு
கொள்ளலாம்.