ADDED : செப் 13, 2011 12:37 AM
நாச்சிக்குளம் : கீழ்நாச்சிக்குளத்தில் பாதுகாப்பற்ற நிலையிலுள்ள ஊரணியை சுற்றி தடுப்பு சுவர்கள் கட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீழ்நாச்சிக்குளம் ஊராட்சிக்கு சொந்தமாக இரண்டு ஏக்கரில் ஊரணி உள்ளது. குடிநீருக்காக ஊரணி அமைக்கப்பட்டது. தற்போது வைகை ஆற்றில் இருந்து கூட்டுக்குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதனால் ஊரணியை மக்கள் பயன்படுத்துவதில்லை. ஆடு,மாடுகள் குளிப்பாட்ட, டிராக்டர், விவசாய கருவிகள் சுத்தப்படுத்த ஊரணி பயன்படுகிறது. ஊரணி சுற்றுச்சுவர் தரைமட்டமாக இருக்கிறது. அப்பகுதியை சேர்ந்த குழந்தைகள், சிறுவர்கள் விளையாடுகையில், தவறுதலாக ஊரணியில் விழும் நிலையுள்ளது. சமீபத்தில் 4 வயது குழந்தை லித்தீஸ்வரி பலியானார். அதற்கு முன் இருவர் இறந்தனர். உயிர்பலியை தடுக்க ஊரணியை சுற்றி தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் .