/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/10நாட்களாக குடிநீரின்றி தவிப்பு: நீண்ட தூரம் அலையும் அவலம்10நாட்களாக குடிநீரின்றி தவிப்பு: நீண்ட தூரம் அலையும் அவலம்
10நாட்களாக குடிநீரின்றி தவிப்பு: நீண்ட தூரம் அலையும் அவலம்
10நாட்களாக குடிநீரின்றி தவிப்பு: நீண்ட தூரம் அலையும் அவலம்
10நாட்களாக குடிநீரின்றி தவிப்பு: நீண்ட தூரம் அலையும் அவலம்
ADDED : ஜூலை 31, 2011 10:49 PM
முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அருகே காத்தாகுளத்தில் 10 நாட்களாக குடிநீர் சப்ளை இல்லாததால், கிராம மக்கள் சுமார் ஐந்து கி.மீ., தூரம் அலையும் அவலம் ஏற்பட்டுள்ளது.
முதுகுளத்தூரில் கடந்த சில நாட்களுக்கு முன் பலத்த சூறாவளி காற்றால் சில கிராமங்களில் மின் சப்ளை துண்டிக்கபட்டது. இதனால் காவிரி குடிநீர் சப்ளை செய்வதில் சிக்கல்நிலை எழுந்தது. காத்தாகுளத்திற்கு குடிநீர் சப்ளை இல்லாமல் கிராம மக்கள், சுமார் ஐந்து கி.மீ., தொலைவிலுள்ள முதுகுளத்தூர் பகுதிக்கு சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்களில் சென்று குடம் ஐந்து ரூபாய் வரை கொடுத்து வாங்குகின்றனர்.
காத்தாகுளம் கிராம மக்கள் கூறியதாவது: சிறு காற்றிற்கே மின் சப்ளை துண்டிக்கப்படுகிறது. இதனால் குடிநீர் சப்ளையும் நின்றுவிடுவதால், மக்கள் கிராமத்தை விட்டே வெளியேறும் நிலையில் உள்ளோம். முதுகுளத்தூர் ஒன்றிய பி.டி.ஒ.,விடம் புகார் கொடுத்துள்ளோம், என்றனர். முதுகுளத்தூர் காவிரி குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி முருகேசனிடம் கேட்டபோது,''சில மின்கம்பங்கள் கீழே சாய்ந்து மின்சாரம் துண்டிக்கபட்டுள்ளது, இதை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மின் துண்டிப்பால்தான் குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது குடிநீர் சப்ளை சீராக்கபட்டுள்ளது'' என்றார்.