ADDED : ஜூலை 30, 2011 03:17 AM
திருப்பரங்குன்றம்: மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில், நிறுவனர்
தியாகராஜர் செட்டியார் தின விழா நடந்தது.
தாளாளர் கருமுத்து தி.கண்ணன் தலை
மை வகித்தார். முதல்வர் அபய்குமார் வரவேற்றார்.விருதுநகர் எம்.எல்.ஏ.,
பாண்டியராஜன் பேசியதாவது: உலக நாடுகளுக்கு இந்தியா தலைமை தாங்கும் நிலை
உருவாகி வருகிறது. மாணவர்கள், தொழில்நுட்பங்களை பயன்படுத்தி புதிய
கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும். அது சமுதாயத்திற்கும், நாட்டின்
வளர்ச்சிக்கும் உகந்ததாக இருக்க வேண்டும் என்றார். கல்லூரி செயலாளர் உமா
பங்கேற்றார். மெக்கானிக்கல் துறை தலைவர் முருகானந்தம் நன்றி கூறினார்.