/உள்ளூர் செய்திகள்/சேலம்/"லோக் அதாலத்' மூலம் 170 வழக்குகளுக்கு தீர்வு"லோக் அதாலத்' மூலம் 170 வழக்குகளுக்கு தீர்வு
"லோக் அதாலத்' மூலம் 170 வழக்குகளுக்கு தீர்வு
"லோக் அதாலத்' மூலம் 170 வழக்குகளுக்கு தீர்வு
"லோக் அதாலத்' மூலம் 170 வழக்குகளுக்கு தீர்வு
ADDED : செப் 25, 2011 01:15 AM
சேலம்: சேலம் ஒருங்கிணைந்த நீதி மன்றத்தில், 'மெகா லோக் அதாலத்' (மக்கள் நீதி மன்றம்) நேற்று துவங்கியது.
சேலம் மாவட்ட நீதி மன்றங்களில் உள்ள நிலுவை வழக்குகளை, ஓய்வு பெற்ற நீதிபதி அடங்கிய, 'பெஞ்ச்' மூலம் தீர்வு காண வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த மக்கள் நீதி மன்றத்தை சேலம் மாவட்ட சட்டக்குழு பணி தலைவரும், மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன் துவங்கி வைத்தார். இந்த மக்கள் நீதி மன்றத்தில், 23 சிவில் வழக்குகளில், 47 லட்சத்து, 13 ஆயிரம் ரூபாய் தீர்வு காணப்பட்டது. ஆறு, செக் வழக்குகளில், ஒரு லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் தீர்வு காணப்பட்டது. 93 மோட்டார் வாகன வழக்குகளில், ஒரு கோடியே, 7 லட்சத்து, 23 ஆயிரத்து, 181 ரூபாய் தீர்வு காணப்பட்டது. தொழிலாளர் சம்பந்தமான, நான்கு வழக்குகளில், நான்கு லட்சத்து, 56 ஆயிரத்து, 342 ரூபாய் தீர்வு காணப்பட்டது. இந்தியன் வங்கிக் கடன் நிலுவை சம்பந்தமான, 44 வழக்குகளில், 12 லட்சத்து, 18 ஆயிரத்து, 167 ரூபாய் தீர்வு காணப்பட்டது. மொத்தம், 170 வழக்குகளில், ஒரு கோடியே, 72 லட்சத்து, 60 ஆயிரத்து, 687 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.