Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/கருங்குளம் யூனியனில் 5 ஆண்டுகளில் 704 தீர்மானங்கள் நிறைவேற்றம்

கருங்குளம் யூனியனில் 5 ஆண்டுகளில் 704 தீர்மானங்கள் நிறைவேற்றம்

கருங்குளம் யூனியனில் 5 ஆண்டுகளில் 704 தீர்மானங்கள் நிறைவேற்றம்

கருங்குளம் யூனியனில் 5 ஆண்டுகளில் 704 தீர்மானங்கள் நிறைவேற்றம்

ADDED : செப் 22, 2011 12:09 AM


Google News
செய்துங்கநல்லூர் : கருங்குளம் யூனியனில் ஐந்து ஆண்டுகளில் 35 கூட்டங்களில் 704 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக யூனியன் சேர்மன் தெரிவித்தார்.

புதிய ஒன்றியக் குழுவிற்கு விரைவில் தேர்தல் நடக்க இருப்பதை முன்னிட்டு பழைய ஒன்றிய குழு கடைசி கூட்டம் கடந்த 16ம் தேதி நடந்தது. செய்துங்கநல்லூரில் யூனியன் அலுவலகம் கவுன்சில் ஹாலில் நடந்த இக்கூட்டத்திற்கு யூனியன் சேர்மன் கோசல்ராம் தலைமை வகித்தார். அதிகாரிகளும், யூனியன் கவுன்சிலர்களும் ஆஜராகி இருந்தனர். கடைசிக் கூட்டத்தில் துணைச் சேர்மன் முருகபெருமாள் பேசியதாவது, பழம்பெரும் யூனியனான கருங்குளம் யூனியன் பெருமைகளை நாம் கட்டிக் காத்துள்ளோம். இது வரை இருந்த சேர்மன்களில் தற்போதைய சேர்மன் கோசல்ராம் அனைத்து கூட்டங்களுக்கும் தலைமை வகித்தார். ஒரு கூட்டம் கூட என் தலைமையில் நடக்கவில்லை. அத்தனை சாதனை படைத்த சேர்மனுக்கு எந்த கோரிக்கைகளை கவுன்சில் கூட்டத்தில் தெரிவித்தாலும் அதை ஏற்று மக்களுக்கு நன்மைகளை செய்த சேர்மனுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் இவ்வாறு பேசினார். அதனை தொடர்ந்து கவுன்சிலர்கள் முருகன், ராஜகோபால், செல்வி ஆறுமுகம், லட்சுமணன், பிச்சம்மாள் அய்யாக்குட்டி, பிச்சையா ஆகியோர் பேசினர். யூனியன் சேர்மன் கோசல்ராம் பேசியதாவது, கடந்த 5 ஆண்டுகளாக நம் யூனியன் வளர்ச்சிக்கு பெரும் துணையாக இருந்த அனைத்து கவுன்சிலர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நம் ஒன்றியக்குழு பொறுப்பேற்ற பின் நாம் 25 சாதாரண கவுன்சில் கூட்டத்தை நடத்தி 690 தீர்மானங்களையும், 2 சிறப்பு கூட்டத்தின் வாயிலாக 2 தீர்மானத்தையும், அவசரக் கூட்டமாக 8 கூட்டங்களை நடத்தி 12 தீர்மானங்களையும் மொத்தம் 35 கூட்டங்களில் 704 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளோம். அத்தனை கூட்டங்களுக்கும் வருகை தந்து எனக்கு பெருந்துணையாக இருந்த அதிகாரிகள், யூனியன் கவுன்சிலர்கள் மற்றும் அலுவலக நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு பேசினார். இக்கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டது. கூட்டம் முடித்த பின் உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us