ஓணம் பண்டிகைக்காக சட்டசபைக்கும் விடுமுறை
ஓணம் பண்டிகைக்காக சட்டசபைக்கும் விடுமுறை
ஓணம் பண்டிகைக்காக சட்டசபைக்கும் விடுமுறை
ADDED : செப் 06, 2011 11:41 PM
சென்னை: வரும் 9ம் தேதி ஓணம் பண்டிகையை ஒட்டி, சென்னையில் அரசு விடுமுறை என்பதால், சட்டசபைக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
9ம் தேதி நடக்க இருந்த மானியக் கோரிக்கைகள், 10ம் தேதி சனிக்கிழமை நடக்கும் என, சபாநாயகர் அறிவித்தார். வரும் 9ம் தேதி, வெள்ளிக்கிழமை ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால், சென்னையில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 9ம் தேதி சட்டசபைக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் ஜெயக்குமார் அறிவிக்கையில், ''வரும் 9ம் தேதி விடுமுறை. எனவே, அன்று சட்டசபையில் நடக்க இருந்த பால்வளம், மீன்வளம், கால்நடை துறைகளுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம், 10ம் தேதி சனிக்கிழமையன்று நடைபெறும்,'' என்றார். இன்று சட்டசபையில், கேள்வி நேரம் முடிந்ததும், நீதி நிர்வாகம், சிறைச்சாலைகள், சட்டத் துறைக்கான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடக்கிறது. அமைச்சர் செந்தமிழன் பதிலளிக்கிறார்.