/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் புதுகை மாவட்ட தே.மு.தி.க.,வினருக்கு அழைப்புஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் புதுகை மாவட்ட தே.மு.தி.க.,வினருக்கு அழைப்பு
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் புதுகை மாவட்ட தே.மு.தி.க.,வினருக்கு அழைப்பு
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் புதுகை மாவட்ட தே.மு.தி.க.,வினருக்கு அழைப்பு
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் புதுகை மாவட்ட தே.மு.தி.க.,வினருக்கு அழைப்பு
ADDED : செப் 04, 2011 12:19 AM
புதுக்கோட்டை: தமிழகத்தில் நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் புதுக்கோட்டை மாவட்ட தே.மு.தி.க.,வினர், இன்று (4ம் தேதி) முதல் 12ம் தேதி வரை விருப்ப மனுக்கள் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் ஜாஹீர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சிமன்றத் தேர்தலில் தே.மு.தி.க., சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து மாவட்டங்கள்தோறும் விருப்பமனுக்கள் பெறப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சிமன்ற பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோர் மாவட்ட தே.மு.தி.க., அலுவலகத்தில் இன்று காலை ஒன்பது மணிமுதல் 12ம் தேதி மாலை ஐந்துமணி வரை விருப்பமனுக்கள் வழங்கலாம். நகராட்சி தலைவர் பதவிக்கு 5,000 ரூபாயும், கவுன்சிலர் பதவிக்கு 2,000 ரூபாயும், டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 2,500 ரூபாயும், கவுன்சிலர் பதவிக்கு ஐநூறு ரூபாயும், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு 5,000 ரூபாயும், பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர் பதவிக்கு 2,000 ரூபாயும் விண்ணப்ப கட்டணமாக செலுத்தி, இதற்கான விண்ணப்பத்தினை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் கட்டணம் செலுத்தியதற்கான ரசீதை இணைத்து, மாநில தேர்தல் பிரிவு செயலாளர் வீரப்பனிடம் விண்ணப்பங்களை கொடுக்க வேண்டும்.


