
பீதியில் மாஜி மந்திரி...
''கோடநாடு பக்கம் யாரும் தலை காட்டக் கூடாதுன்னு, உத்தரவு பிறப்பிச்சிருக்காருங்க...!'' என, முதல் ஆளாக விவாதத்தை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.''யாரு பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.''அந்த மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் மந்திரி தான், இப்படி சொல்லிருக்காருங்க... தி.மு.க., ஆட்சியில, ஜெயலலிதா, கோடநாட்டுக்கு போகும்போதெல்லாம் ரொம்ப குடைச்சல் கொடுத்தாங்க... ஜெ., பங்களா இருக்கற கோடநாடு, குன்னூர் தொகுதியில வருது... கதர்வாரிய மாஜி அமைச்சர் தான், இந்த தொகுதி எம்.எல்.ஏ.,வா இருக்காருங்க...
''இந்நிலையில, உடன்பிறப்புகளுக்கு உருக்கமா ஒரு உத்தரவு பிறப்பிச்சிருக்காருங்க... 'கோடநாடு பகுதியில, நம்மாளுங்க எந்தப் பிரச்னையும் செஞ்சிடக் கூடாது... சின்ன கல்லை எறிஞ்சாக் கூட, தொகுதி எம்.எல்.ஏ.,வான எனக்குத் தான் பிரச்னை வரும்... அதனால, எல்லாரும் அமைதியா இருங்க'ன்னு, கெஞ்சி கேட்டுக்கிட்டாருங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''விளக்கமா சொல்லும் வே...'' என்றார் பெரியசாமி அண்ணாச்சி.
''யார் தப்பு செஞ்சாலும் கண்டுக்கக் கூடாதுன்னு, ரெண்டு தரப்பும் ஒப்பந்தம் செஞ்சிருக்கு பா...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் அன்வர்பாய்.