/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பாரத் சேவாத் சமாஜ் மருத்துவபயிற்சி ஆசிரியர் தேர்வுபாரத் சேவாத் சமாஜ் மருத்துவபயிற்சி ஆசிரியர் தேர்வு
பாரத் சேவாத் சமாஜ் மருத்துவபயிற்சி ஆசிரியர் தேர்வு
பாரத் சேவாத் சமாஜ் மருத்துவபயிற்சி ஆசிரியர் தேர்வு
பாரத் சேவாத் சமாஜ் மருத்துவபயிற்சி ஆசிரியர் தேர்வு
ADDED : ஆக 22, 2011 02:22 AM
புளியங்குடி:மத்திய அரசு அமைப்பின் பாரத் சேவாத் சமாஜ்-ல் மாற்றுமுறை
மருத்துவ பிரிவில் யோகா மற்றும் அக்குபஞ்சர் மருத்துவ பயிற்சி ஆசிரியராக
புளியங்குடி காளித்துரை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மத்திய அரசு அமைப்பின்
பாரத் சேவாத் சமாஜ் மூலம் மாற்றுமுறை மருத்துவத்தில் சிறந்து விளங்கும்
பயிற்சி ஆசிரியர்களை தமிழகம் முழுவதும் இருந்து தேர்வு செய்யும் முகாம்
மதுரையில் நடந்தது.
இதில் தேர்வு செய்யப்படட்டவர்களுக்கு பாரத் சேவாத்
சமாஜ் மூலம் பேக்கல்ட்டி பயிற்சி கடலூரில் நடந்தது. இதில் இந்திய
அக்குபஞ்சர் கல்வி வேந்தர் டாக்டர் ரவி மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி
மாற்றுமுறை மருத்துவ மண்டல திட்ட அதிகாரி (பொறுப்பு) டாக்டர் விஜயராகவ்
பயிற்சியளித்தனர்.இதில் புளியங்குடியை சேர்ந்த யோகா மற்றும் அக்குபஞ்சர்
மருத்துவ பயிற்சி ஆசிரியர் காளித்துரை தேர்வு செய்யப்பட்டார். அவருக்கான
சான்றிதழை மண்டல திட்ட அதிகாரி (பொறுப்பு) விஜயராகவ் வழங்கினார். தேர்வு
செய்யப்பட்ட காளித்துரையை மாவட்ட முதன்மை நீதிபதி விஜயராகவன், சிவகிரி
தேர்தல் துணை தாசில்தார் மாரிமுத்து, சொக்கம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர்
செந்தில்குமரன், புளியங்குடி முஸ்லிம் நல அறக்கட்டளையின் பொது தலைவர்
செய்யது சுலைமான், யோகா ஆசிரியை செல்வராணி உள்ளிட்ட பலர் வாழ்த்து
தெரிவித்தனர்.