/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/சரக அளவிலான கபடி : விஸ்வபாரதி பள்ளி வெற்றிசரக அளவிலான கபடி : விஸ்வபாரதி பள்ளி வெற்றி
சரக அளவிலான கபடி : விஸ்வபாரதி பள்ளி வெற்றி
சரக அளவிலான கபடி : விஸ்வபாரதி பள்ளி வெற்றி
சரக அளவிலான கபடி : விஸ்வபாரதி பள்ளி வெற்றி
ADDED : ஆக 21, 2011 02:06 AM
அரூர்: சந்தப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரூர் சரக அளவிலான பள்ளி மாணவர்களக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் நடந்தது.
கபடி போட்டியில் மொரப்பூர் விஸ்வபாரதி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கபடி போட்டியில் வெற்றி பெற்றனர். மேல் மூத்தோர் மாணவர்களுக்கான கபடி மற்றும் மேல் மூத்தோருக்கான பெண்கள் கபடி போட்டியில் வெற்றிபெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றனர். அமேல் மூத்தோர் செஸ் போட்டியியில் மாணவர்கள் பிரவீன்குமார், ராபியா ஆகியோர் முதல் மற்றும் இரண்டாம் இடங்களில் வெற்றி பெற்றனர். மாணவிகள் பிரிவு கேரம் போட்டியில் தேன்மொழி மற்றும் சாலினி ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் முதலிடம் பெற்றனர். சாதனை படைத்த மாணவர்களையும், உடற்கல்வி ஆசிரியர்களையும் விஸ்வபாரதி கல்வி நிறுவன தாளாளர் சாட்சதிபதி, பள்ளி முதல்வர் வாசுதேவன், நிர்வாக இயக்குனர் சுரேஷ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்