/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/"புதைகுழியான' சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி"புதைகுழியான' சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி
"புதைகுழியான' சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி
"புதைகுழியான' சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி
"புதைகுழியான' சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி
ADDED : ஆக 19, 2011 11:16 PM
தர்மபுரி: தர்மபுரி நகரில் சாலைகள் பல்வேறு காரணங்களுக்காக தோண்டப்பட்டு மூடப்பட்ட நிலையில் பல இடங்களில் முறையாக மூடாமல் விட்டதால், மழை பெய்யும் நேரங்களில் குழி தோண்டப்பட்ட பகுதியில் செல்லும் கன ரக வாகனங்கள் பள்ளத்தில் சிக்கி பெரும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தர்மபுரி நகரில் கடந்த மூன்று மாதமாக சாலை விரிவாக்க பணி, பாதாள சாக்கடை திட்ட பணி, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணி உள்ளிட்ட பணிகளுக்காக குழிகள் தோண்டப்பட்டு, மூடப்பட்டுள்ளன. குழிகள் தோண்டப்பட்ட பகுதியில் முறையாக மூடாமல், பல இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளன. குறிப்பாக நான்கு ரோடு சந்திப்பு ரவுண்டானா பகுதி, நேதாஜி பைபாஸ் சாலை, பென்னாகரம் சாலை, குமாரசாமிபேட்டை உள்ளிட்ட இடங்களில் குழிகள் மூடப்பட்ட போதும், மேடும், பள்ளமாக உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் முறைப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரவுண்டானா பகுதியில் இருந்து அரசு மருத்துவக்கல்லூரி வரையில் சாலை விரிவாக்கப்பணிக்காக கடந்த மூன்று மாதங்களுக்கு முன் குழிகள் தோண்டப்பட்டு, ஜல்லிகள் போட்டி சாலை அமைக்க தளத்தை உறுதிப்படுத்தும் பணி நடந்த போதும், இது வரையில் விரிவுப்படுத்தப்பட்ட சாலைகளை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், இந்த பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக விரிக்கப்பட்ட ஜல்லிகள் அனைத்தும் சிதறி போய் இருப்பதோடு, இரு சக்கர வாகனங்களை நிறுத்த முடியாத அளவுக்கும், சாலைகளில் ஜல்லி பெயர்ந்து வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் பெரும் இடையூறாக உள்ளது. குமாரசாமிபேட்டை பகுதியில் சிறு மழைக்கும் சாலை முழுவதும் சேறும், சதியுமாக மாறி வாகனங்கள் சறுக்கியபடி செல்லும் நிலையுள்ளது. இந்த பகுதியிலும் மேடும், பள்ளமாக இருப்பதால், இரவு நேரங்களில் செல்லும் வாகனங்கள் குழிகளில் விழுந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் பெரும்பாலும் மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுவோர் அடிக்கடி குழிகளில் விழுந்து விபத்துக்களை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வரையில் தர்மபுரி நகரப்பகுதியில் தொடர் மழை பெய்தது. இந்த மழைக்கு நகரில் குழிகள் தோண்டப்பட்ட பகுதிகள் அனைத்தும் ஈரத்தன்மை ஏற்பட்டு கன ரக வாகனங்கள் குழிகள் தோண்டப்பட்ட பகுதியில் செல்லும் போது, பள்ளத்தில் சிக்கி மீள முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பென்னாகரம் சாலையில் கனரக லாரி சிக்கி கொண்டது. நேற்று காலை ரவுண்டானா அருகே வந்த லாரி பள்ளத்தில் டயர் சிக்கி மீண்டும் வர முடியாமல் போனது. மாற்று லாரி வரைவழைக்கப்பட்டு, லாரியின் இருந்த மூட்டைகள் அகற்றி பின்னர் கிரேன் மூலம் லாரியை மீட்டனர். இதனால், நேற்று காலை ரவுண்டானா பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. கடந்த மாதமும் இதே போன்று நான்கு ரோடு பகுதியில் கனரக லாரி சிக்கி பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து வாகனங்கள் தோண்டப்பட்ட பள்ளங்களில் புதைகுழிகளில் சிக்குவதை போல் லாரி டயர்கள் சிக்கி மீள முடியாமல் அவதிப்பட்ட போதும், நகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் சாலையை சீர் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


