/உள்ளூர் செய்திகள்/தேனி/56 சதவீதம் லாரிகள் ஸ்டிரைக்கில் பங்கேற்பு56 சதவீதம் லாரிகள் ஸ்டிரைக்கில் பங்கேற்பு
56 சதவீதம் லாரிகள் ஸ்டிரைக்கில் பங்கேற்பு
56 சதவீதம் லாரிகள் ஸ்டிரைக்கில் பங்கேற்பு
56 சதவீதம் லாரிகள் ஸ்டிரைக்கில் பங்கேற்பு
ADDED : ஆக 19, 2011 11:00 PM
தேனி:தேனி மாவட்டத்தில் மொத்தம் 56 சதவீதம் லாரிகள் மட்டுமே ஸ்டிரைக்கில் பங்கேற்றன. இதனால் சரக்குகளுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை.
தேனி மாவட்டத்தில் 780 லாரிகள், 146 மினிலாரிகள், 27 டெம்போ லாரிகள், 5
டேங்கர் லாரிகள் உட்பட 958 லாரிகள் உள்ளன. இவற்றில் நேற்று 537 லாரிகள்
மட்டும் ஸ்டிரைக்கில் பங்கேற்றன. 56 சதவீதம் லாரிகள் மட்டும் பங்கேற்றதால்
மற்ற லாரிகள் வழக்கம் போல் இயங்கின. இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு
தட்டுப்பாடு எதுவும் ஏற்படவில்லை.அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும்
லாரிகளுக்கும், ஸ்டிரைக்கில் பங்கேற்காமல் இயக்கப்படும் லாரிகளுக்கும்
போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.


