ADDED : ஆக 18, 2011 12:25 AM
சாத்தூர் : படந்தால் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தளவாட பொருட்கள் வழங்கும் விழா நடந்தது.
முன்னதாக படந்தால் ஊராட்சி மன்ற தலைவர்எஸ்.சுப்புராஜ் தலைமை வகித்தார்.பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ் வரவேற்றார்.
விழாவில் ரோட்டரி கிளப் ஆளுநர் ஆறுமுகப் பாண்டியன், துணை ஆளுநர் ஜபருல்லா,தலைவர் பாலமுருகன் மற்றும் உறுப்பினர்கள் பேசினர். ரோட்டரி கிளப் சார்பில் 40 சேர்,20 டேபிள், போர்டு, ரேக்,மேஜை ஆகிய தளவாட பொருட்களை வழங்கினர்.பள்ளி உதவியாசிரியர் மகேஸ்வரி நன்றி கூறினார்.


